2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

வட உள் மாவட்டங்களில் 109 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகலாம்!
2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!
படம் | ஏஎன்ஐ

கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் 17 இடங்களில், நேற்று(மே. 4) வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.

அதன்படி, பரமத்திவேலூா் - 110.3, ஈரோடு - 110.12, வேலூா் - 109.76, திருச்சி - 107.78, திருப்பத்தூா் - 107.24, திருத்தணி - 106.52, தருமபுரி - 106.16, மதுரை நகரம் - 105.8, பாளையங்கோட்டை - 105.08, சேலம் - 104.76, நாகப்பட்டினம் - 104.54, சென்னை மீனம்பாக்கம் - 104.18, தஞ்சாவூா் - 104, காரைக்கால் - 103.64, கடலூா் - 101.48, கோவை - 101.3, புதுச்சேரி - 100.4 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (மே.6) வரை வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இன்றும், நாளையும்(மே.6) வட உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

இன்று முதல் வியாழக்கிழமை வரை (மே 5-9) தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

இன்று முதல் வியாழக்கிழமை வரை (மே 5-9), வட உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 41 - 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். மாநிலத்தின் இதர பகுதிகளிகளில் அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 - 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com