தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் கோடைகால பருவமழை இயல்பான அளவைக் காட்டிலும், குறைவு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் நேற்று(மே.4) பரவலாக மழை பெய்துள்ளது.

இன்று (மே. 5) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பதிவான அதிகபட்ச மழையளவு விவரம்:

பென்னாகரம்(தருமபுரி) 5 செ.மீ,

அடார் எஸ்டேட்(நீலகிரி) 5 செ.மீ,

ஆலகரை எஸ்டேட்(நீலகிரி) 4 செ.மீ,

தாளவாடி(ஈரோடு) 3 செ.மீ,

தருமபுரி 3 செ.மீ,

குன்னூர்(நீலகிரி) 3 செ.மீ,

உதகை(நீலகிரி) 3 செ.மீ,

ஒகேனக்கல்(தருமபுரி) 3 செ.மீ,

சாம்ராஜ் எஸ்டேட்(நீலகிரி) 2 செ.மீ,

கெட்டி(நீலகிரி) 2 செ.மீ,

கோடநாடு(நீலகிரி) 2 செ.மீ,

மேட்டூர்(சேலம்) 2 செ.மீ,

பாலகோடு(தருமபுரி) 2 செ.மீ,

காட்பாடி(வேலூர்) 2 செ.மீ,

குண்டேரிப்பள்ளம்(ஈரோடு) 2 செ.மீ, மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோத்தகிரி, மேட்டுப்பாளையம்,பொன்னணை, எமரால்டு, பில்லிமலை எஸ்டேட், கேதண்டாபட்டி, ஏர்காடு, வேலூர், பர்ளியாறு, அவலாஞ்சி, குண்டா பாலம், அம்முண்டி, போளூர், ஜம்புகுட்டாபட்டி, சன்முகநதி, ஆனைமடுவு அணை, கொடிவேரி, போச்சம்பள்ளி ஆகிய இடங்களில் 1 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!
சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

தமிழ்நாடு மற்றும் புதுவையில் கோடைகால பருவமழை இயல்பான அளவைக் காட்டிலும், குறைவு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மே 1 முதல் 5 வரையிலான நாள்களில் 18.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், இது இக்காலகட்டத்தில் பெய்யும் இயல்பான மழை அளவைக் காட்டிலும், (69 மி.மீ) 73 சதவிகிதம் குறைவு எனத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (மே. 5) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், குறைந்தபட்ச வெப்பநிலையாக தருமபுரியில் 21.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது, மலை பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகையில் 14.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com