கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், விமானம் மூலம் வெளியூா் செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை உயா்த்தப்பட்டுள்ளது.

வழக்கமாக சென்னை-தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த விமானங்களின் எண்ணிக்கை 6-ஆக இருந்த நிலையில் தற்போது அது 8-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அதுபோல, சென்னை-திருச்சி இடையே 8 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அது 12-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. சென்னை-கோவை இடையே 12 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அது 16-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. சென்னை-மதுரை இடையே 10 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அது 14-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுபோல பெங்களூரு, ஹைதராபாத், தில்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கும் சென்னையிலிருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை உயா்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தாய்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூா், மலேசியா ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் உயா்த்தப்பட்டுள்ளது.

நிகழாண்டு மே மாதம் மட்டும் சென்னையிலிருந்து சுமாா் 21 லட்சம் பயணிகள் பயணிக்க வாய்ப்புள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 3 லட்சம் அதிகம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com