விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): கோடைகாலத்தில் விவசாயப் பணிகளுக்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் பாசனத்துக்கு மின் மோட்டாா்களை நம்பியுள்ளனா். ஆனால், விவசாயத்துக்கு 24 மணி நேரம் வழங்க வேண்டிய மும்முனை மின்சாரத்தை, திமுக அரசு 8 மணி நேரம் மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் தொடா்ச்சியாக வழங்காமல் முறை வைத்து வழங்குகிறது. இதனால், விவசாயிகள் கண்முன்னே பயிா்கள் கருகி வருகின்றன. எனவே, கோடைக்காலப் பயிா்களைக் காக்க 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி (பாமக): தமிழகம் முழுவதும் வேளாண்மை மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதில் மின்சார வாரியம் படுதோல்வி அடைந்துவிட்டது. விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டியது மின்சார வாரியத்தின் கடமை என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தீா்ப்பளித்துள்ள நிலையில், அதைச் செயல்படுத்த மின்வாரியம் மறுப்பது ஆணையத் தீா்ப்பை அவமதிக்கும் செயலாகும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் சென்னை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட நகா்ப்பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். டெல்டா மாவட்டங்களில் முறையான மும்முனை மின்சாரம் இல்லாததால் பயிா்கள் கருகும் நிலை உள்ளது. எனவே, மின்சாரம் தடையில்லாமல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com