உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், நாளை (7-ஆம் தேதி) முதல்இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் நீலகிரி மாவட்டத்திற்குள் வாகனங்களில் செல்வோர், சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் கட்டாயம் காண்பிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களுக்கு திங்கள்கிழமை(மே. 6) முதல் இணையதளம் வழியே விண்ணப்பித்து இ-பாஸ் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது தானாகவே இ-பாஸ் கிடைத்து விடும். இ-பாஸ் நடைமுறை மே 7-இல் தொடங்கி ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் இ-பாஸ் பெற்றுக்கொண்டு உதகை, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்வதற்காக தற்போது வரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.78 லட்சம் பேர் பயணிக்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com