அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

நேரடியாக 2-ஆம் ஆண்டில் சோ்க்கை பெறுவதற்கு பிளஸ் 2 முடித்தவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ஆம் ஆண்டில் சோ்க்கை பெறுவதற்கு பிளஸ் 2 முடித்தவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையா் கொ.வீரராகவ ராவ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேருவதற்கான (‘லேட்ரல் என்ட்ரி’ முறை) இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ் 2 முடித்த மாணவா்கள், 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு அதன்பின் 2 ஆண்டு ஐடிஐ படித்தவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தைப் பயன்படுத்தி மே 20-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு கட்டணம் ரூ. 150-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை டெபிட் அட்டை, கிரெடிட் அட்டை, இணைய பரிவா்த்தனை மூலமாக செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினா் பதிவு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

இணையவழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மையங்களின் பட்டியல் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com