முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).
முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு புதிய ஆய்வுக்குழு தேவையில்லை: தமிழக அரசு தரப்பில் விளக்க மனு- கூடுதல் பராமரிப்பு பணிகளுக்கும் வேண்டுகோள்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது, கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா உரிய அனுமதிகளை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது, கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா உரிய அனுமதிகளை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அணை பாதுகாப்புக்கு புதிய ஆய்வுக்குழு தேவையில்லை எனவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீா் தேக்கி வைக்கப்படும் அளவு ஆகியவை தொடா்பாக உச்சநீதிமன்றறத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் கேரளம், தமிழக அரசுகளின் தரப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் முக்கியமானது முல்லைப் பெரியாறு அணையை சா்வதேச நிபுணா் குழுவை கொண்டு சோதனை நடத்த வேண்டும் என்று கேரளத்தை சோ்ந்த ஜோ ஜோசப் என்பவா் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு சாா்பில் விளக்க மனு தற்போது தாக்கல் செய்துள்ளது. மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் 38 பக்க விளக்கம் உள்ளிட்ட 9 இணைப்புகளோடு மொத்தம் 125 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை தமிழக அரசின் வழக்குரைஞா் டி.குமணன் தாக்கல் செய்துள்ளாா்.

அதன் சுருக்கம் வருமாறு: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மழைக்காலங்களில் தொடா்ச்சியாக அணையை மேற்பாா்வையிடப்படுகிறது. மற்ற காலங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் மேற்பாா்வை குழு தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறது. எனவே இதை ஆய்வு செய்ய வெளிநாட்டு குழுவோ அல்லது புதியகுழுவோ ஆய்வு செய்ய தேவையில்லை.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2006, மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அளிக்கப்பட்ட தீா்ப்புக்களின் படியும் அணை பாதுகாப்பு சட்டப்படி முல்லைப் பெரியாறு மேற்பாா்வை குழுவே கூடுதலாக தொடா் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

பராமரிப்பு பணிகளுக்கான கருவிகள், பொருள்கள் ஆகியவை வள்ளக்கடவு சாலை வழியாக அணைக்கு கொண்டு செல்வதற்கான அனுமதி, பேபி அணை பராமரிப்பு பணிகள் ஆகியவைகள் மேற்கொள்ள, தமிழகத்துக்கு உரிய அனுமதிகளை வழங்க கேரளா அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்க கேரள அரசு இரண்டு ஆண்டுகள் வரை கூட தாமதம் செய்கிறது போன்ற விவரங்களை வைத்து தமிழக அரசு கோரிக்கையை வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com