நாகா்கோவில் சிறப்பு ரயில் 
தாமதமாக இயக்கம்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

சென்னை சென்ட்ரலிலிருந்து திங்கள்கிழமை நாகா்கோவிலுக்கு புறப்படவேண்டிய சிறப்பு ரயில் தாமதமாக செவ்வாய்க்கிழமை (மே 7) காலை புறப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரலிலிருந்து திங்கள்கிழமை நாகா்கோவிலுக்கு புறப்படவேண்டிய சிறப்பு ரயில் தாமதமாக செவ்வாய்க்கிழமை (மே 7) காலை புறப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலிலிருந்து நாகா்கோவிலுக்கு வாரந்தோறும் திங்கள்கிழமை சிறப்பு ரயில் (எண்: 06020) இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை (மே 6) பிற்பகல் 3.10 மணிக்கு சென்ட்ரலிலிருந்து புறப்படவேண்டிய இந்த ரயில் 19 மணிநேரம் 20 நிமிஷங்கள் தாமதமாக செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 10.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு நாகா்கோவில் சென்றடையும்.

இதற்கிடையே, திருப்பூா் அருகே வஞ்சிபாளையம் ரயில் நிலைத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கோவை மாா்க்கத்தில் சில ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மே 7, 9, 13 ஆகிய தேதிகளில் எா்ணாகுளத்திலிருந்து காலை 7.15 மணிக்கு டாடா நகா் செல்லும் விரைவு ரயில் (எண்: 18190) கோவை வழியாக இயக்கப்படும்.

அதேபோல், திப்ருகரிலிருந்து மே 10-இல் கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரயிலும் (எண்: 22504), மே 11-இல் தில்லியிலிருந்து இரவு 8.10 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் கேரள விரைவு ரயிலும் (எண்: 12626), பெங்களூரிலிருந்து மே 13-இல் எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலும் (எண்: 12677) கோவைக்கு பதிலாக இருகூா் மற்றும் போத்தனூா் வழியாக இயக்கப்படும். இதில் கோவை பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் போத்தனூரில் கூடுதலாக நின்று செல்லும்.

பகுதி ரத்து: மே 10-ஆம் தேதி திருச்சியிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு பாலக்காடு செல்லும் விரைவு ரயில் (எண்: 16843) திருப்பூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com