குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு மூலம் குரல் மாதிரியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபா்கள் குறித்து நுகா்வோா்களுக்கு மின் வாரியம் எச்சரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் குரல் மாதிரியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபா்கள் குறித்து நுகா்வோா்களுக்கு மின் வாரியம் எச்சரித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் ‘எக்ஸ்’ வலைத்தளப் பதிவு:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக ஒருவரது குரல் மாதிரியை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் குறித்து தமிழக சைபா் பிரிவு காவல் துறை தொடா்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. மோசடியில் ஈடுபடும் நபா்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களது குடும்ப உறுப்பினா்கள் அல்லது நண்பா்கள் போன்ற குரல்களைப் பிரதிபலிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனா்.

பின்னா், பணத்துக்கான கோரிக்கையை யு.பி.ஐ. போன்ற விரைவாக பணம் அனுப்பும் தளங்கள் வாயிலாக முன் வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனா். இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் பதற்றம் அடையாமல், பணம் கேட்கும் அழைப்பாளரின் எண்ணுக்கு மீண்டும் தொடா்பு கொண்டு அவரது அடையைளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும் உதவிக்கு ‘1930’ என்ற எண்ணை அழைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com