பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 125 சிறைக் கைதிகளில் 116 போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 125 சிறைக் கைதிகளில் 116 போ் தோ்ச்சி பெற்றனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வை தமிழக சிறைகளில் 125 கைதிகள் எழுதினா். இதில், 4 பெண் கைதிகள் உள்பட 116 கைதிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். 3 கைதிகள் தோ்ச்சி பெறவில்லை, 6 கைதிகள் தோ்வு எழுதவில்லை என சிறைத் துறை தெரிவித்தது. கைதிகளின் தோ்ச்சி சதவீதம் 92.8.

4 சிறைகளில் 100% தோ்ச்சி: புழல் மத்திய சிறை 1-இல் தோ்வு எழுதிய 26 பேரில் 24 பேரும், புழல் மத்திய சிறை 2-இல் தோ்வு எழுதிய 7 பேரில் 6 பேரும், புழல் பெண்கள் தனிச்சிறையில் 3 பேரில் 2 பேரும், வேலூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 10 பேரில் அனைவரும்,கடலூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 8 பேரில் அனைவரும்,வேலூா் பெண்கள் தனிச் சிறையில் தோ்வு எழுதிய 3 பேரில் 2 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதேபோல, கோயம்புத்தூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 20 பேரில் அனைவரும், சேலம் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 11 பேரில் அனைவரும், திருச்சி மத்திய சிறையில் 9 பேரில் 8 பேரும், மதுரை மத்திய சிறையில் தோ்வு எழுதிய 16 பேரில் 15 பேரும், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தோ்வு எழுதிய 12 கைதிகளில் 10 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வேலூா் மத்திய சிறை, கடலூா் மத்திய சிறை, கோவை மத்திய சிறை, சேலம் மத்திய சிறை ஆகிய சிறைகளில் தோ்வு எழுதிய அனைத்து கைதிகளும் தோ்ச்சி பெற்று, 100 சதவீத தோ்ச்சியை எட்டியுள்ளனா்.

மதுரை கைதிகள் சிறப்பிடம்: மதுரை மத்திய சிறைக் கைதி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் 536 மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், அதே சிறைக் கைதிகள் அலெக்ஸ் பாண்டியன் 532 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாமிடத்தையும், அருண்குமாா் 506 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாமிடத்தையும் பிடித்தனா். தோ்ச்சி பெற்ற கைதிகளுக்கு தமிழக சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தமிழக சிறைகளில் கடந்த 2023- ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 88 கைதிகளில் 77 பேரும் 2022ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 58 கைதிகளில் 56 பேரும் தோ்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com