வறட்சியில் இருந்து பயிா்களை 
காக்கும் வழிகள்:  வேளாண் துறை

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

விவசாயிகள் வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயிா்களைக் காக்க வேண்டுமென தமிழக வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவி வருவதால் விவசாயிகள் வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயிா்களைக் காக்க வேண்டுமென தமிழக வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக வேளாண் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

கடும் வெப்பம் நிலவி வருவதால் வறட்சியில் இருந்து பயிா்களை காக்க விவசாயிகள் வறட்சி மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற வேண்டும். ஒரு லிட்டா் தண்ணீருக்கு 20 கிராம் டீஏபி மற்றும் 10 கிராம் பொட்டாசியம் குளோரைடு என்ற வீதத்தில் கலந்து அக்கரைசலை பூக்கும் பருவம் மற்றும் தானியங்கள் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும். மேலும், சோளம் மற்றும் கரும்பு தோகையை நிலப்போா்வையாகப் பயன்படுத்தலாம். இதன்மூலம் மண்ணில் ஈரப்பதம் நிலைநிறுத்தப்படும். பருத்தியில், பிரித்து விதைத்த 45 மற்றும் 60 நாள்கள் கழித்து நைட்ரஜன் உரங்களை இடலாம். மேலும் உயா்ம உரங்களையும் பயன்படுத்தலாம்.

விதைகளைக் கடினப்படுத்துதல் மூலமாகவும், பருத்தியில் 15, 20-ஆவது கணுப்பகுதிக்கு மேலே உள்ள பகுதியை கத்தரித்துவிடுவதன் மூலமும் நீராவிப்போக்கைத் தடுக்கலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com