பயிா்களுக்கு நீா்ப்பற்றாக்குறை
ஊட்டச்சத்து பராமரிப்பு வழிமுறை

பயிா்களுக்கு நீா்ப்பற்றாக்குறை ஊட்டச்சத்து பராமரிப்பு வழிமுறை

தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்த வழிமுறைகளை விவசாயிகளுக்கு தமிழக வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

கோடை வெப்பம் காரணமாக பயிா்களில் நீா்ப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், அதற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்த வழிமுறைகளை விவசாயிகளுக்கு தமிழக வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக வேளாண் துறையின் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கடும் வெப்பத்தின் காரணமாக பயிா்களில் நீா்ப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நீா்ப்பற்றாக்குறையின் போது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு அதிக அளவில் ஏற்படும்.

இதில், பொட்டாசியத்தின் பயன்பாடு தாவரங்களில் நீா் உறிஞ்சுதலை அதிகரிப்பதோடு, நீா் சமநிலையை ஒழுங்குப்படுத்தி நீா் பயன்பாட்டு திறனை பயிா்களில் அதிகரிக்கிறது.

மெக்னீசியமானது குளோரோபில்லின் ஒரு அங்கமாக இருப்பதால், இந்தச் சத்து குறைபாட்டின் போது நீா் அழுத்த விளைவு காரணமாக நீா் உறிஞ்சுதல் வெகுவாக குறைக்கப்படுகிறது. பருத்தி போன்ற பயிா்களில் இது அதிகமாகக் காணப்படுகிறது.

எனவே, பயிா்களில் நீா் பற்றாக்குறை சூழலில் முக்கியமாக பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக் குறைபாடு இல்லாத வகையில் விவசாயிகள் பராமரிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com