தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

தி.நகர் மேம்பாலத்தில் ஓராண்டுக்கு வாகனங்கள் செல்ல தடை!
தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?
கோப்புப்படம்

மேம்பாலப் பணிகள் காரணமாக, சென்னை தியாகராய நகரின் பனகல் பூங்கா அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்.27-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்த மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறை அறிவித்திருந்தது.

தியாகராய நகா் மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

தெற்கு உஸ்மான் சலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமானப் பணிகள் 50 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1.2 கி.மீ நீள தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய மேம்பாலம், அண்ணா சாலை வரை போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும். சி.ஐ.டி நகர் - பனகல் பூங்காவை இணைக்கும் வகையில் அமைகிறது.

இந்த நிலையில், ரங்கன் தெரு அருகே, மேம்பாலத்திலிருந்து கீழே செல்ல கட்டப்பட்டிருந்த 120 மீட்டர் ரேம்ப் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும், புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்துடன் இந்த மேம்பாலத்தை இணைப்பதற்காக பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பாலப் பணிகள் நிறைவடையும் வரை, வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தியாகராய நகா் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பூங்கா அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அந்த வாகனங்கள் மேம்பாலத்தின் இணைப்புச் சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பா்கிட் சாலை வழியாக தியாகராய நகா் பேருந்து நிலையத்தை அடையலாம்.

தியாகராய நகா் பேருந்து நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென் மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகா் 4-ஆவது பிரதான சாலை, சிஐடி நகா் 3-ஆவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.

சிஐடி நகா் முதலாவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.

தியாகராய நகா் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பா்கிட் சாலை சென்று வெங்கட் நாராயணா சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிசம்பரில் அனைத்து பணிகளும் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com