கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனை நகராட்சித் துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு புதன்கிழமை சந்தித்தாா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை அமைச்சா் கே.என்.நேரு மற்றும் திமுக மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் புதன்கிழமை சந்தித்தனா்.

அப்போது, கமல்ஹாசனின் உறவினா் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ஆறுதல் கூறினா். அதோடு மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்ததற்காக கமல்ஹாசனுக்கு அவா்கள் நன்றியும் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com