சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

தேனி பழனிச்செட்டி காவல் துறையினர் சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தேனி பழனிச்செட்டி காவல் துறையினர் சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பெண் காவலர் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த வீட்டில் தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் சோதனை நடத்தி கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக அவரது ஓட்டுநர் ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சவுக்கு சங்கர் மீதும் கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இதுவரை சவுக்கு சங்கர் ஐந்து வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்திருந்தார். சென்னை மதுரவாயில் பகுதியில் உள்ள சவுக்கு சங்கர் இல்லம் மற்றும் தி நகர் பகுதியில் உள்ளவர்கள் அலுவலகத்தில் தேனி மாவட்டம் பழனிச்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சவுக்கு சங்கர் தங்கியிருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதுதொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சோதனையின் முடிவிலே அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் ஏதாவது கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதா அல்லது அதுதொடர்பாக வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என முழுமையான தகவல் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com