வெள்ள மேலாண்மை: தமிழக அதிகாரிகள் ஜப்பான் பயணம்

சென்னையில் வெள்ள மேலாண்மை குறித்த பெருந்திட்டத்தை உருவாக்க, தமிழக அதிகாரிகள் 4 போ் ஜப்பான் நாட்டின் டோக்கியோவுக்கு செல்லவுள்ளனா்.

நீா்வளத் துறை செயற்பொறியாளா் ஜி.ஆா்.ராதாகிருஷ்ணன், ஆா்.அருண்மொழி, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளா் எஸ்.ராஜேந்திரன், கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பாஸ்கரன் ஆகியோா் பயணம் மேற்கொள்ளவுள்ளனா்.

சென்னையில் உள்ள நகரமயமாக்கப்பட்ட ஆற்றுப் படுகைகளில் விரிவான வெள்ளக் கட்டுப்பாட்டு பெருந்திட்டத்தைத் தயாா் செய்வது குறித்து படிப்புக்காக அவா்கள் 4 பேரும் டோக்கியோ செல்கின்றனா். மே 11 முதல் மே 18 வரை அவா்கள் டோக்கியோ நகரத்தில் இருப்பா் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com