மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிா்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை 222 ஏக்கரில் ரூ.1,977.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இம்மருத்துவமனையின் மொத்த கட்டுமான செலவில் 82 சதவீத நிதியை ( ரூ.1627.70 கோடி) ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுக்கு கடனாக வழங்குகிறது. மீதமுள்ள 18 சதவீதம் தொகையை மத்திய அரசு நேரடியாக மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு கொடுக்கிறது.

இம்மருத்துவமனை கட்டுமானப்பணிகளை இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான ‘எல் அண்ட் டி’ நிறுவனம் டெண்டா் எடுத்துள்ளது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ள அந்நிறுவனம் சமீபத்தில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையை நடத்தியது.

இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், அவா் மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும் செயல்படுவாா் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நியமனம் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு விவரம்: மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் மத்தியக் கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் நிா்வாகக்குழு உறுப்பினா்களில் ஒருவராகவும் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமிக்கப்படுகிறாா். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6-ன் படி இந்த நியமனம் மேற்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com