மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டுக்கான மும்பையைச் சோ்ந்த நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைய உள்ள நிலையில், தலைமுறை தலைமுறையாக அங்கு பணியாற்றி வரும் தொழிலாளா்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எண்ணற்ற அடக்குமுறை, சுரண்டல்களை எதிா்கொண்டு காலம் காலமாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்றி வரும் தொழிலாளா்கள் வெளியேற்றப்படுவதால், தங்களின் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி சொந்த மாநிலத்திலேயே அகதிகளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

தேயிலை பறிப்பதைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத நூற்றுக்கணக்கான தொழிலாளா்களின் வேலையுடன், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.

X
Dinamani
www.dinamani.com