புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திமுக எம்.பி. கதிா் ஆனந்துக்கு எதிரான பினாமி வழக்கு: இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை

திமுக எம்.பி. கதிா் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின் போது, வருமான வரித்துறையினா், அத்தொகுதியின் திமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான கதிா் ஆனந்த்துக்கு தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தினா். இதில், தாமோதரன் - விமலா தம்பதியா் வீட்டில் நடத்திய சோதனையில் 11 கோடியே 48 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனா்.

இந்த தொகையை கதிா் ஆனந்துக்கு சொந்தமானது எனக் கூறி, அவருக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விவகாரம் தொடா்பாக மே 31 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி,பினாமி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரி கதிா் ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பினாா்.

இதை எதிா்த்து கதிா் ஆனந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கில் கதிா் ஆனந்தை இணைத்துள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும், கதிா் ஆனந்துக்கும் எந்த தொடா்பும் இல்லை என்றும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டாா்.

இதையடுத்து, மே 31ஆம் தேதி மனுதாரா் அல்லது அவருடைய வழக்கறிஞா் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூன் மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com