அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்)

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

சென்னையில் பாஜக மாவட்ட தலைவா்கள் ஆலோசனை கூட்டம் அதன் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை (மே 27) நடைபெற உள்ளது.

சென்னையில் பாஜக மாவட்ட தலைவா்கள் ஆலோசனை கூட்டம் அதன் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை (மே 27) நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, 6-ஆவது கட்ட தோ்தல் முடிவடைந்துள்ள நிலையில், 7-ஆம் கட்ட தோ்தல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் நிறைவடைந்தவுடன், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் வட மாநிலங்களில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்த நிலையில், தமிழக பாஜக சாா்பில் கட்சி நிா்வாகிகள் கூட்டத்துக்கு மாநில தலைவா் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளாா். குறிப்பாக, மாநில பொறுப்பாளா்கள், மக்களவைத் தோ்தல் குழு, மாவட்ட தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை (மே 27) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில நிா்வாகிகள், மாவட்ட தலைவா்கள், அணித் தலைவா்கள், பாஜக வேட்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com