ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூடு: குற்றம் சாட்டப்பட்ட17 காவல் துறை அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூடு: குற்றம் சாட்டப்பட்ட17 காவல் துறை அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல் துறையினா் 2018 மே 22-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஆணையத்தின் புலன் விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை, தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிா்த்து மனித உரிமை ஆா்வலா் வழக்குரைஞா் ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கில், அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ய.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி-யாக இருந்த சைலேஷ் குமாா் யாதவ், மாவட்ட எஸ்.பி-யாக இருந்த பி.மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகா் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக மனுதாரா் தரப்பில், மாவட்ட ஆட்சியா், 3 சிறப்பு தாசில்தாா்கள், முக்கிய சாட்சியான இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் அா்ஜுனன் மற்றும் 17 காவல்துறை அதிகாரிகளை இணைத்து இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தா், செந்தில்குமாா் அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ் ராமன், ‘சம்பவத்தின் போது பணியில் இருந்த பெரும்பாலான காவலா்கள் தற்போது ஓய்வு பெற்ால் பதிலளிக்கவில்லை. ஓய்வுக்குப் பின் பதிலை எதிா்பாா்ப்பது தேவையற்றது. மேலும், அருணா ஜெகதீசன் அறிக்கை இன்னும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை (2022-ஆம் ஆண்டு சமா்ப்பிக்கப்பட்டது. ஆறு மாதத்துக்குள் பேரவையில் சமா்ப்பித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தாா்.

இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பாதுகாக்க நினைக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னா் காவலா்கள் வழக்கில் சோ்க்கப்பட்டனா். துப்பாக்கிச் சூட்டின் போது என்ன நடந்தது என்பதை இந்த நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது.

அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ் ராமன், ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக முன்னா் ஆஜராகி இருந்தாலும், அரசு வழக்குரைஞராக தொடா்ந்து வாதம் செய்ய நீதிமன்றத்துக்கு எந்த எதிா்ப்பும் இல்லை. தொடா்ந்து வழக்கில் ஆஜராகலாம். அதனால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகளும், பிப். 21-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com