அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு முருக பக்தர்களை இலவச ஆன்மிக சுற்றுலா செல்ல வியாழக்கிழமை (ஜன.11) முதல் அறநிலையத்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்


சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் முருக பக்தர்கள் வியாழக்கிழமை (ஜன.11) முதல் அறநிலையத்துறை இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 200 பக்தர்கள் வீதம் 5 கட்டமாக ஆண்டிற்கு  1,000 பக்தர்களை இலவசமாக ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளனர். மீதமுள்ளவர்கள் அடுத்தடுத்த சுற்றுலாப்பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதன்படி, முதற்கட்டமாக அறுபடை வீடுகளுக்கான ஆன்மிக சுற்றுலாப்பயணம் வரும் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இதையடுத்து 60 முதல் 70 வயதுடைய தகுதியான பக்தர்கள் வியாழக்கிழமை (ஜன.11) முதல் அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com