மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

வால்பாறையில் அரசுப் பேருந்துகள் மோதல்: பதறவைக்கும் விடியோ வெளியீடு!

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

News image
Updated On :18 ஜனவரி 2024, 3:28 pm IST

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

வால்பாறை வெள்ளிமலை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக அரசுப் பேருந்து வந்துள்ளது. வரும் வழியில் அரசுப் பேருந்தில் பிரேக் செயல் இழந்ததால் சாலையில் நின்றிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி சென்றது அப்போது பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை வந்த அரசுப் பேருந்து எதிரே வரும்போது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இதில் இரண்டு பேருந்திலும் பயணம் செய்த பயணிகளுக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் என 20-க்கும் மேற்பட்டவர்கள் காயங்கள் ஏற்பட்டது. பின்பு அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதில் ஆறு பயணிகளுக்குக் காயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளதால் வால்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.