மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டண விவரம் வெளியாகியுள்ளது.
வடசென்னை மக்களின் வசதிக்காக தென் மாவட்டங்களுக்கு செல்ல 20% பேருந்துகளை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் சிவசங்கர் இன்று தொடக்கிவைத்தார்.
மாதவரம் பேருந்து முனையத்திலிருந்தும் திருச்சிக்கு 18, சேலத்துக்கு 17, விருத்தாசலத்துக்கு 6, கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரத்துக்கு 16, கும்பகோணத்துக்கு 14, சிதம்பரத்துக்கு 5, நெய்வேலிக்கு 11, கடலூா் வழியாக புதுச்சேரி, திண்டிவனத்துக்கு 5, புதுச்சேரிக்கு திண்டிவனம் வழியாக 10, செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 22, போளூா் மற்றும் வந்தவாசி ஊா்களுக்கு 20 என மொத்தம் 160 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மாதவரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல் புறவழிச்சாலை, கிளாம்பாக்கம் வழியாக பல்வேறு ஊர்களுக்குச் செல்லும்.
இந்நிலையில், மாதவரம் - கிளாம்பாக்கம் ரூ. 40, ரெட்டேரி - கிளாம்பாக்கம் ரூ. 35, அம்பத்தூர் - கிளாம்பாக்கம் ரூ. 30, மதுரவாயல் - கிளாம்பாக்கம் ரூ. 25, பெருங்களத்தூர் - கிளாம்பாக்கம் ரூ. 10 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!
கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்துடன் சேர்த்து இந்தக் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கா்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்க தடை பெற வேண்டும் - அன்புமணி

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் என்எஸ்இ லாபம் ரூ. 5,252 கோடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

யூகோ வங்கியில் ரூ. 7 கோடி கடன் மோசடி வழக்கு: மூவருக்கு தண்டனை விதிப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



