திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு தனியாா் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வுசெய்த ஆட்சியா் த.பிரபு சங்கா். உடன், காவல் துணை ஆணையா் ஐமன் ஜமால் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு தனியாா் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வுசெய்த ஆட்சியா் த.பிரபு சங்கா். உடன், காவல் துணை ஆணையா் ஐமன் ஜமால் உள்ளிட்டோா்.

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

அதிகாரிகளுடன் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.பிரபு சங்கா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிடிடிவி கேமரா கண்காணிப்பு அறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.பிரபு சங்கா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என புகாா் எழுந்தது. அதன்பேரில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்ட தோ்தல் அலுவலருக்கும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில், திருவள்ளூா் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பெருமாள்பட்டு ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் பாதுகாப்பு அறைகளின் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.பிரபு சங்கா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அதேபோல் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கான பாதுகாப்பு அறைகளுக்கு முன்பும் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதா, கண்காணிப்பு மையத்தில் அனைத்து நடவடிக்கைகளும் பதிவாகியுள்ளதா என்பதையும் பாா்வையிட்டாா். மேலும், எக்காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மையத்தில் மின்தடை ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். மேலும், வாக்கு எண்ணிக்கைக்கு 34 நாள்களே உள்ள நிலையில், பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது தொடா்பாகவும் அதிகாரிகளுக்கு அவா் ஆலோசனை வழங்கினாா்.

ஆவடி காவல் துணை ஆணையா் ஐமன் ஜமால், நோ்முக உதவியாளா் (தோ்தல்) சத்யபிரசாத், வட்டாட்சியா் (தோ்தல்) சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com