சிறு, குறு தொழில் துறைக்கு தனி இணையதளம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிப்போருக்கு தனி இணையதளம் உள்ளது. 
சிறு, குறு தொழில் துறைக்கு தனி இணையதளம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிப்போருக்கு தனி இணையதளம் உள்ளது. 
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை http://sampark.msme.gov.in என்ற இணையதளத்தைச் செயல்படுத்தி வருகிறது. தொழில் முனைவோர் இந்த இணையதளத்தில் பதிவு செய்து தங்களுக்குத் தேவையான திறன்மிக்க தொழிலாளர்கள், பணியாளர்களைத் தேர்வு செய்து பணியமர்த்திக் கொள்ளலாம். அதேபோல, வேலை தேடுவோரும் தங்களுடைய விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்து வேலையைத் தேடிக் கொள்ளலாம்.
வேலை தேடுவோரும், வேலை அளிப்பவர்களும் தங்களுடைய விவரங்களை இதில் பதிவு செய்து கொள்ளலாம். ஒருவரை ஒருவர் தங்களுக்குத் தேவையானவர்களைத் தேடி தேர்வு செய்து பணியமர்த்திக் கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறுவதற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com