தனித்துவம் பெற்று விளங்கும் அரியலூர் சிமென்ட்

வறட்சி மிகுந்த மாவட்டம், குடிப்பதற்கு சுண்ணாம்பு நீர்தான் கிடைக்கும், வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என்று பேசப்பட்டு வந்த அரியலூர் மாவட்டம், இன்று சிமென்ட் ஆலைகளின்
தனித்துவம் பெற்று விளங்கும் அரியலூர் சிமென்ட்

வறட்சி மிகுந்த மாவட்டம், குடிப்பதற்கு சுண்ணாம்பு நீர்தான் கிடைக்கும், வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என்று பேசப்பட்டு வந்த அரியலூர் மாவட்டம், இன்று சிமென்ட் ஆலைகளின் மூலமாக பலருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது.
 மாவட்டத்தில் முந்திரி, கரும்பு, சோளம், பருத்தி, கடலை, கம்பு போன்ற தோட்டப்பயிர்கள் சாகுபடி ஒருபுறம் நடைபெற, மற்றொரு புறத்தில் டெல்டா பாசன விவசாயமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 மேலும் இம்மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல், நிலக்கரி, ஜிப்சம் படிவம் போன்ற கனிமவளங்கள் அதிகளவில் கிடைக்கின்றன.
 தமிழக அரசின் அரசு சிமென்ட், டால்மியா, ராம்கோ, அல்ட்ராடெக், சங்கர் சிமென்ட், செட்டிநாடு சிமென்ட் போன்ற பெரு ஆலைகளும், 3 சிறிய சிமென்ட் ஆலைகளும் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன.
 ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் : இங்குள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் மூலம் நாளொன்றுக்கு 1 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து தூத்துக்குடி, கேரளம் வழியாக இலங்கை, சிங்கப்பூர், உள்ளிட்டவெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்நிய செலாவணியும் அதிகம் கிடைக்கிறது. நேரடி மற்றும் மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை சிமென்ட் தொழிற்சாலைகள் வழங்கி வருகின்றன. மற்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்படும் சிமென்ட்டை காட்டிலும், அரியலூர் சிமென்ட் தனித்துவம் பெற்று விளங்குவதற்கு இங்குள்ள மூலப்பொருளின் வேதித்தன்மைதான்காரணம்.
 உற்பத்திச் செலவும் குறைவு: சிமென்ட் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால், சிமென்ட் தயாரிப்பதற்கான செலவுகளும் குறைவு. தமிழகத்தில் கரூர், திருநெல்வேலி, கேரளத்தில் மலபார்,ஆந்திரத்தில் டோன் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிமென்ட் ஆலைகளுக்கு அங்கு மூலப் பொருள்கள் கிடைப்பதில்லை. அரியலூர் மாவட்டத்தில் இருந்து தான் மூலப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ளது போன்ற பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் அல்லது பெரிய தொழிற்சாலைகள் இங்கு கிடையாது. ஆனாலும், இந்தியாவில் சிமென்ட் உற்பத்தியில் முதல் மாநிலமாகவும், அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் மாவட்டமாகவும் அரியலூர் திகழ்கிறது.
 - சி. சண்முகவேல்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com