உள்ளூர் தயாரிப்பு: மரச்செக்கு இயந்திரங்கள்

மரச்செக்குகளில் எண்ணெயை ஆட்டி எடுத்து பயன்படுத்தி வந்தது இயந்திரமயமாக்கலால் படிப்படியாகக் குறைந்தது. 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பிரபலமடைந்தது.
உள்ளூர் தயாரிப்பு: மரச்செக்கு இயந்திரங்கள்

மரச்செக்குகளில் எண்ணெயை ஆட்டி எடுத்து பயன்படுத்தி வந்தது இயந்திரமயமாக்கலால் படிப்படியாகக் குறைந்தது. 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பிரபலமடைந்தது.
 தற்போது, மரச்செக்கு எண்ணெய் பயன்பாட்டுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மரச்செக்கு எண்ணெய்க் கடைகள் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன.
 வேர்க்கடலை, எள், தேங்காய் உள்ளிட்டவற்றில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்க கல்செக்குகள் பயன்பட்டன. மாடுகளின் உதவியுடன் இந்தப் பணி நடைபெற்றது. பின்னர், மின்சாரத்தால் இயங்கும் மரச்செக்குகள் வரத் தொடங்கின. மரச்செக்குகளில் மெதுவாக இயக்கப்படுவதால் எண்ணெய் வித்துகளில் உள்ள சத்துகள் முழுமையாகக் கிடைக்கின்றன. 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு மரச்செக்கு எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் கடைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யும் தொழில்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
 எண்ணெய் செக்கு இயந்திரங்களைத் தயாரிக்கும் பணி விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் பட்டறையில் ரோட்டரி என்றழைக்கப்படும் செக்கு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
 இந்தப் பட்டறையின் உரிமையாளர் எம்.சண்முகம் கூறியதாவது:
 எண்ணெய் தயாரிப்புக்காக மோட்டார் பொருத்தப்பட்ட மரச்செக்குடன் கூடிய இயந்திரத்தை நிறைவான விலையில் தயாரித்து வருகிறோம். நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரம் இயங்க குறைந்த மின்சாரப் பயன்பாடு போதுமானது. குறைந்த சப்தத்துடன் இயங்கும். 2006-ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரங்களைத் தயாரித்து வருகிறோம். இந்த இயந்திரத்துடன் எண்ணெய் வடிகட்டும் பில்டரையும் சேர்த்து வழங்குகிறோம். இளைஞர்கள் பலரும் மரச்செக்கு எண்ணெய் விற்பனையில் ஆர்வம் காட்டுவதால், மரச்செக்கு இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளது. மரச்செக்கு இயந்திரம் சுமார் ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டிலும், இரும்புச் செக்கு இயந்திரம் ரூ.1.95 லட்சம் மதிப்பீட்டிலும் தயாரிக்கப்படுகின்றன.
 இதற்கான மரங்கள், இரும்புத் தளவாடங்கள் கோவை, சென்னை, புதுச்சேரி பகுதிகளில் இருந்து தருவிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் மட்டுமன்றி, வேர்க்கடலை, உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட தானியங்களை உடைக்கும் இயந்திரங்கள், தானியங்களைப் பிரிக்கும் இயந்திரம், தேங்காய் உரிக்கும் இயந்திரங்களையும் செய்து கொடுக்கிறோம். சென்னை, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதியில் ஆர்டர் பெற்று இயந்திரங்கள் செய்துக் கொடுத்து வருகிறோம். எனது தந்தை காலத்திலிருந்து விவசாய இயந்திரங்கள் தயாரிக்கும் பட்டறை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எனது சகோதரர்கள், பொறியியல் பட்டதாரியான எனது மகன் மற்றும் 5 பேர் இந்தப் பட்டறையில் என்னுடன் பணியாற்றிகின்றனர். மக்கள் இயற்கைவழி உணவுப் பழக்கத்துக்கு மாறிவரும் வேளையில், பாரம்பரியத் தொழில்களும் புத்துயிர் பெற்று வருகின்றன என்றார்.
 -இல.அன்பரசு
 படங்கள்: என்.ராமமூர்த்தி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com