43 ஆண்டுகளுக்கு முன்பு 45-ரூபாயில் தொடங்கப்பட்ட கரூர் சுமதி ஸ்வீட்ஸ்

1977 - ஆம் ஆண்டில் 45 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட சுமதி ஸ்வீட்ஸ் நிறுவனம், இன்று பெரிய அளவில் விரிவடைந்துவிட்டது.
43 ஆண்டுகளுக்கு முன்பு 45-ரூபாயில் தொடங்கப்பட்ட கரூர் சுமதி ஸ்வீட்ஸ்

1977 - ஆம் ஆண்டில் 45 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட சுமதி ஸ்வீட்ஸ் நிறுவனம், இன்று பெரிய அளவில் விரிவடைந்துவிட்டது. பாரம்பரிய மூலப்பொருள்களைக் கொண்டு நல்ல தரம், சுகாதாரத்துடன் இனிப்பு-கார வகைகளை இன்றும் வழங்கி கரூர் மக்கள் மனதில் நிலை கொண்டிருக்கிறது.
 கரூர் மாவட்டம், பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி செட்டியார்- சிறும்பாயி அம்மாளின் 10 குழந்தைகளில், மூத்த மகனாகப் பிறந்தவர் சுமதி பி.ரத்தினம். எஸ்.எஸ்.எல்.சி. வரை பயின்று, தன் குடும்பத்துக்காக வேலை நிமித்தமாக கரூர் வந்த இவர், பின்னர் அங்கேயே குடிபெயர்ந்தார். ஏ.கே.சி. என்ற நிறுவனத்தில் சாதாரண ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
 அதன் பின்னர் பாரம்பரியமிக்க ஒரு லாலா மிட்டாய் கடையில் பணிபுரிந்து, தானும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், வெறும் 45 ரூபாய் முதலீட்டில் ரத்தினத்தால் தொடங்கப்பட்டதுதான் சுமதி ஸ்வீட்ஸ்.
 கரூர்- கோவை சாலையில் (அஜந்தா, எல்லோரா திரையரங்குகள் அருகில்) 14 ஆண்டுகளாக, பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, வியாபார நெருக்கடிகளை சமாளித்து கரூர் மக்களின் ஆதரவுடன் தள்ளுவண்டியில் தனது தயாரிப்பான சிறிய பஜ்ஜி, வடை வெறும் 10 பைசாவிற்கு விற்பனை செய்தார் ரத்தினம். மேலும் ஜிலேபி, பால்கோவா, மிக்சர் என இனிப்பு, கார வகைகளை நல்ல தரத்துடனும், சுவையுடனும் வழங்கினார்.
 1993- ஆம் ஆண்டில், தனது முன்னாள் முதலாளியின் வழிகாட்டுதலின்படி, தள்ளுவண்டியில் இருந்த சுமதி ஸ்வீட்ஸ், தனது சொந்த கட்டடத்துக்கு இடம் பெயர்ந்தது. சுமதி என்ற தனது ஒரே மகளின் பெயரையே தனது நிறுவனத்துக்கு சூட்டினார் ரத்தினம்.
 2002- ஆம் ஆண்டில் ரத்தினத்தின் மூத்த மகன் சிவசுப்பிரமணியன் ரத்தினம் பட்டப்படிப்பை முடித்து விட்டு, கூடுதலாக பேக்கரியைத் தொடங்கியதால், சுமதி ஸ்வீட்ஸ்- பேக்கரி என உருமாறியது. 2013-ஆம் ஆண்டில் ரத்தினத்தின் இளைய மகன் பிரபுராஜ் ரத்தினம் வெளிநாட்டில் பணியாற்றினாலும், தங்கள் குடும்பத் தொழிலால் ஈர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2013, அக்டோபர் 18 ஆம் தேதி கரூர்-கோவை சாலையில் சுமதி ஸ்வீட்ஸுடன் உணவகமும் தொடங்கப்பட்டது.
 இதைத் தொடர்ந்து 2016, அக்டோபர் 17 ஆம் தேதி சுமதி பலகாரக்கடை மற்றும் சைவ உணவகம் என்ற பெயரில் புதிய கிளை கரூர் ஜவஹர் பஜாரில் தொடங்கப்பட்டது. இந்த கிளையின் முதல் தளத்தில் சுமதி ரத்தினம் ஹாலும் உதயமாகியுள்ளது.
 ஒவ்வொரு ஆணின் வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ரத்தினத்தின் வளர்ச்சிக்கு அவரது மனைவி அருக்காணி அம்மாள் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
 தரமான மூலப்பொருள்களைத் தேர்வு செய்து வீட்டு முறைப்படி இனிப்பு, காரம், கேக் வகைகள், கும்பகோணம் டிகிரி காபி, பழச்சாறுகள், தேநீர், காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடு, கலவை சாத வகைகள், சைனீஸ் உணவு வகைகளைஇன்றும் தரமுடன் வழங்குகிறது சுமதி ஸ்வீட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com