ஆன்மிக, சமூக சேவையில் ஸ்ரீ ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் ஆன்மிக, சமூக சேவைகளை செய்து வரும் ஸ்ரீ ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆன்மிக, சமூக சேவையில் ஸ்ரீ ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் ஆன்மிக, சமூக சேவைகளை செய்து வரும் ஸ்ரீ ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
 இந்த அறக்கட்டளை மூலம் ஆன்மிகப் பணி, ஏழை, எளியோருக்கான சமூகப் பணிகள், ஆதரவற்றோர், முதியோர், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்கள், நல உதவிகள், ஏழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
 அதேபோல், இயற்கை வளத்தைப் பாதுகாக்க பள்ளிகளில் மரக்கன்று நடுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது. மேலும், ஆண்டுதோறும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவர்களுக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கி ஊக்குவித்து வருகிறது.
 தொடர்ந்து பள்ளிகளில் இலவச ஆன்மிக வகுப்புகள், சொற்பொழிவுகளை நடத்தி மாணவர்களை நல்வழிப்படுத்தியும், அவர்கள் உடல் ரீதியாக வலிமை பெற்று ஆரோக்கியமான தலைமுறைகளாக விளங்க இலவச யோகா, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
 அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருப்பாவை 30 பாசுரங்கள் மனப்பாடமாக ஒப்புவிக்கும் மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
 மேலும், ஸ்ரீ ராமாநுஜரின் ஆயிரமாவது ஜயந்தியை விழாவை முன்னிட்டு, ஆயிரம் திருவீதிகளில் நாலாயிர திவ்ய பிரபந்தத்துடன், அவரது திருவுருவ ரத யாத்திரை கருத்துப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
 அதேபோல் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேசபக்தி, தெய்வபக்தி என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது. உலக நன்மைக்காவும், மழை வேண்டியும், ஆன்மிக அருளாளர்களை அழைத்து வந்து சிறப்பு யாகங்கள், 108 கோ பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
 இதுபோன்ற எண்ணற்ற ஆன்மிக, சமூக சேவையில் ராணிப்பேட்டை ஸ்ரீ ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை தன்னை அர்ப்பணித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com