தொழில் தொடங்குவதற்கு அனுமதி சான்றிதழ் "உத்யோக்' ஆதார் எண்

தொழில் தொடங்குவதற்கான அனுமதி சான்றிதழாக "உத்யோக்' ஆதார் எண் திகழ்கிறது.
தொழில் தொடங்குவதற்கு அனுமதி சான்றிதழ் "உத்யோக்' ஆதார் எண்

தொழில் தொடங்குவதற்கான அனுமதி சான்றிதழாக "உத்யோக்' ஆதார் எண் திகழ்கிறது.
தொழில் முனைவோர் புதிதாக தொழில் தொடங்கும்போது அதற்கான உரிமத்தை அரசிடமிருந்து பெறும் நடைமுறையை எளிதாக்கும் நோக்கில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை உத்யோக் ஆதார் எண் என்ற சான்றிதழை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு அந்தந்த மாநில அரசுகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலைத் தொடங்கும் போது ஆன்லைனில் எஸ்எஸ்ஐ பார்ட் 1, எஸ்எஸ்ஐ பார்ட் 2 என்று இரு சான்றிதழ்கள் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அவை நீக்கப்பட்டு மத்திய அரசின் உத்யோக் ஆதார் என்ற ஒரு பக்க சான்றிதழ் இருந்தாலே போதுமானது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
இதை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு தொழில் முனைவோரின் ஆதார் எண், பெயர், முகவரி, தொழில் நிறுவனத்தின் பெயர், வங்கி கணக்கு எண், முதலீடு, தொழில் தொடங்கி தேதி, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை அதற்கான இணையதள முகவரியில் பதிவு செய்து உத்யோக் ஆதார் எண்ணை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதைப் பதிவுச் சான்றிதழாகப் பயன்படுத்தி அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான ஆதாரமாக இச்சான்றிதழைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உத்யோக் ஆதார் எண் பெறுவதற்கு https://udyogaadhaar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com