நவீன ரக பட்டுக்கு காஞ்சிபுரம் பச்சையப்பாஸ்!

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனத்தில் தீபாவளியை முன்னிட்டு பல நவீன ரக டிசைன் பட்டுச்சேலைகள் அதிகமாக வந்திருப்பதால் அதை வாங்க ஏராளமானோர் கூட்டம், கூட்டமாக குவிந்த வண்ணம் உள்ளனர்.
நவீன ரக பட்டுக்கு காஞ்சிபுரம் பச்சையப்பாஸ்!

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனத்தில் தீபாவளியை முன்னிட்டு பல நவீன ரக டிசைன் பட்டுச்சேலைகள் அதிகமாக வந்திருப்பதால் அதை வாங்க ஏராளமானோர் கூட்டம், கூட்டமாக குவிந்த வண்ணம் உள்ளனர்.
 கடந்த 1926-இல் தொடங்கப்பட்ட பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனம் வேலூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கிளைகளைத் தொடங்கி பட்டு விற்பனையில் ஒரு புரட்சியை, புதிய எழுச்சியை உண்டாக்கியிருக்கிறது. பொதுவாக பெண்கள் பட்டுச்சேலைகள் அணிந்தாலே ஆனந்தமும்,புத்துணர்வும், தன்னையும் அறியாத ஒரு கம்பீரமும் இருக்கும். ஒரு காலத்தில் அரச குடும்பத்தினர், ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் மட்டுமே பட்டுச்சேலைகளை அணிவது வழக்கமாக இருந்தது.
 பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பட்டுச்சேலைகளை அணிந்தனர். விலையும் அதிகமானதாக இருந்தது. ஆனால், இன்றோ சாதாரண மக்களும் அணிந்து கொள்ளும் வகையில், அவரவர் வசதிக்கு ஏற்றவாறு பட்டுச்சேலைகள் விற்பனைக்கு வந்து விட்டதால், பட்டுச்சேலைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக பட்டு என்றாலே பட்டென்று நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் பட்டுச்சேலையாகத்தான் இருக்கும்.
 காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனமானது, இந்த ஆண்டு தீபாவளிக்கென காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளில் லினன் மற்றும் காதி பட்டுச்சேலைகள், களம்கரி மற்றும் மதுபானி பெயிண்டிங் பட்டுச்சேலைகள் என உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பல வண்ண பட்டுச்சேலை ரகங்களை களம் இறக்கியிருக்கிறது. காஞ்சிபுரம் பட்டுப் புடவை ரகங்களில் ஒன்றான கோரா புடவை ரகம், பெண்களை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்திருக்கிறது. இதுபோன்ற பட்டு ரகங்கள் ஏராளமானவை தீபாவளிக்கு முன்பாகவே பச்சையப்பாஸ் நிறுவனத்தில் விற்பனைக்கு வந்து விட்டதை அறிந்து பட்டு வாங்க குவியும் கூட்டமும் அலை மோதுகிறது.
 பச்சையப்பாஸில் பட்டு வாங்க வந்த வாடிக்கையாளர்களில் ஒருவரான ரா.கண்ணகி கூறியது:
 இந்த ஆண்டு தீபாவளிக்கு புதிதாக வந்துள்ள மதுபானி பெயிண்டிங்ஸ் பட்டுப்புடவை என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது. இச்சேலையில் உள்ள பல வண்ண ஓவியங்கள் எப்படி தீட்டப்பட்டன என்பது ஒரு புரியாத புதிர். திருமண நிகழ்ச்சிகளுக்கும்,கோயில் திருவிழாக்களுக்கும் இதை உடுத்திக் கொண்டு சென்றால் அனைவரது பார்வையும் நம்மீது தான் இருக்கும் என்றார்.
 பட்டு விற்பனை குறித்து பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிர்வாகிகள் கூறியது:
 வாடிக்கையாளர்களின் ரசனை, வாசனை எது எனத் தெரிந்து அவர்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு பட்டுச்சேலைகளை நாங்களே எங்களிடம் உள்ள பட்டு நெசவுக்கூடங்கள் மூலமாக தயாரித்து விற்பது எங்களின் தனிச்சிறப்பு. தரம் குறைந்த பட்டுச்சேலைகளை நாங்கள் எப்போதும் விற்றதில்லை. தரமானது, தரமற்றது என இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லி உண்மையான, தரமான பட்டுச்சேலைகளை மட்டுமே விற்பனை செய்கிறோம்.
 காஞ்சிபுரத்தில் காமராஜர் சாலையிலும், சென்னை தி.நகரிலும் உள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸில் மிக, மிகத் தரமான பட்டுச்சேலைகளை மட்டுமே விற்பனை செய்கிறோம். காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள கிளையில் அனைத்து வகையினருக்கும் ஏற்ற ரெடிமேட் ஆடைகளும் புதிது, புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன. மணமக்கள் அணியும் திருமணப் பட்டு, கோட்சூட் போன்றவையும் எங்களிடம் விற்பனைக்கு உள்ளன. பட்டுச்சேலையில் மணமக்களின் உருவப்படங்கள் வேண்டுமானால் அதையும் சிறப்பாக நெய்து தருகிறோம் என்று பச்சையப்பாஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com