அழகு மிளிரும் ரெடிமேட் சட்டைகள்

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஏரல், மிக சிறந்த வணிக நகரமாக திகழ்ந்து வருகிறது
அழகு மிளிரும் ரெடிமேட் சட்டைகள்

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஏரல், மிக சிறந்த வணிக நகரமாக திகழ்ந்து வருகிறது. அனைத்து வகையான வியாபாரங்கள் இருந்தாலும், ஜவுளி, தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் விற்பனையில் இந்நகருக்கென தனிச் சிறப்பு உண்டு.

 இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெசவுத் தொழிலும் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் நெசவுத் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தற்போது இல்லாமலேயே போய் விட்டது.

 இதை நம்பி இருந்த குடும்பங்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்ட நிலையில், அதில் ஒரு குடும்பத்தினர் மட்டும் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில் செய்யத் தொடங்கினர்.

 தற்போது அந்த ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஏரல் நகருக்கு அடையாளமாக இருந்து வருகிறது. இந்நிறுவனம் மூலம் ஏரல், முக்காணி, வாழவல்லான், ஆத்தூர், ஆறுமுகமங்கலம், அகரம், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, திருச்செந்தூர், மங்கலக்குறிச்சி, சாயர்புரம் உள்ளிட்ட கிராம மக்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஆனந்த் கார்மென்ட்ஸ் நிறுவனர் சுப்பிரமணியன் கூறியது: தரம் ஒன்றே எங்களது குறிக்கோள். ஆண்கள் அணியும் சட்டைகளில் பல்வேறு மாடல்களை புகுத்தினோம். சிறுவர்களுக்கான சட்டைகளில் பல வண்ணங்களை கொண்டும், விதவிதமான வடிவங்களிலும் வடிவமைத்தோம். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

 எனது மகன் முருகராஜா பேஷன் டிசைனிங் படித்து விட்டு தற்போது தொழிலில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறார். நாங்கள் ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணிந்திடும் வகையிலான சட்டைகளை தயாரித்து வருகிறோம்.

 தென் மாவட்டங்களில் உள்ள பிரபல ஜவுளிக் கடைகளுக்கு மட்டுமன்றி, சென்னை, கோவையிலுள்ள பிரபல ஜவுளிக் கடைகளுக்கும் சட்டைகளை தயாரித்து கொடுத்து வருகிறோம்.

 இத்தொழிலுக்கு வந்து பொன் விழா காண உள்ள நிலையில், ஏரல் நகரின் பெருமையை பறைசாற்றும் வகையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எங்கள் ரெடிமேட் சட்டைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

 -ஏ.தினகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com