ஏற்றுமதி வாய்ப்புகளைக் கொண்ட கயிறு சார்ந்த தொழில்கள்

கயிறு சார்ந்த தொழிலானது, அதிக தொழிலாளர்களை கொண்டதும், ஏற்றுமதி வாய்ப்புகளை கொண்டதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். 
ஏற்றுமதி வாய்ப்புகளைக் கொண்ட கயிறு சார்ந்த தொழில்கள்

கயிறு சார்ந்த தொழிலானது, அதிக தொழிலாளர்களை கொண்டதும், ஏற்றுமதி வாய்ப்புகளை கொண்டதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். 
தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. கயிறு தொழிலில் கேரள மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசின் கயிறு வாரியம், கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, "காயர் உத்யமி யோஜனா' என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலமாக, கிராமப்புற பகுதியில் தொழில்முனைவோரை உருவாக்குதல்; பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்; தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தை பெருக்குதல்; நவீனத் தொழில்நுட்பம் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல்; தேங்காய் நார் சார்ந்த பொருள்களின் உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்; தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்துதல்; கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈடுபட வைத்தல் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது.
தொழிலின் திட்ட மதிப்பு: தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.10 லட்சத்திற்குள் இருந்தால் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் பெறலாம். இந்த மூலதனம் தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.
அரசு மூலதன மானியம்: அரசு மூலமாக வழங்கப்படும் மானியம் தொழிலின் திட்ட மதிப்பில் 40 சதவீதமாகும். அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும். தொழில் முனைவோர் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.
வங்கிக் கடன்: அதிகபட்சமாக தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 55 சதவீதத்தை வங்கி கடனாக வழங்கும்.
பயனாளிகளுக்கான தகுதிகள்: 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு கிடையாது. தென்னை நார் சம்பந்தமான பொருள்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டும் இத்திட்டம் பொருந்தும். தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் தகுதியுடையவை. இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற கயிறு வாரியம் மற்றும் அதன் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, காயர் போர்டு ரீஜனல் அலுவலகம், 103, வள்ளலார் தெரு, வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி, 642001 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04259-222450. விண்ணப்பங்களை http://coirboard.gov.in/ என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- சொக்கம்பட்டி வி.குமாரமுருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com