நெகமம் காட்டன் சேலை உற்பத்திக்கு உதவி தேவை!

பொருளாதார சுணக்க நிலையால் நடப்பு தீபாவளி பருவத்தில் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்காமல் காட்டன் சேலைகள் உற்பத்தி சரிந்துள்ளதாக நெகமம் காட்டன் சேலைகள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நெகமம் காட்டன் சேலை உற்பத்திக்கு உதவி தேவை!

பொருளாதார சுணக்க நிலையால் நடப்பு தீபாவளி பருவத்தில் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்காமல் காட்டன் சேலைகள் உற்பத்தி சரிந்துள்ளதாக நெகமம் காட்டன் சேலைகள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு
 வருகின்றன. ஆரம்ப காலங்களில் 6 கெஜம், 8 கெஜம் என நூல் சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக நாகரிகத்துக்கேற்ப நூல் சேலைகளில் இருந்து காட்டன் உள்பட பல்வேறு விதமான புதிய ரக சேலைகளின் மீது பெண்களின் பார்வை மாறியது. அதற்கேற்றார் போல் நெகமம் சுற்றுப்பகுதியிலும் காட்டன் சேலைகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டன. அவ்வப்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும், வடிவங்களையும் தங்களது சேலை உற்பத்தியில் புகுத்தி வருகின்றனர். தரமான சேலைகள் என்பதால் மக்களாலும் விருப்பத்துடன் கேட்டும் வாங்கும் சேலையாக நெகமம் காட்டன் உள்ளது. தனித்துவமான வடிவங்கள், நிறங்கள் மற்றும் தரத்தால் உலக அளவில் நெகமம் காட்டன் என தனிப்பெயருடன் வளர்ந்து நிற்கிறது.
 நெகமத்தை ஒட்டியுள்ள காட்டம்பட்டி, கோவில்பாளையம், கோப்பனுôர்புதுôர், சேரிபாளையம், ஜக்கார்பாளையம், எம்மேகவுண்டன்பாளையம், குஞ்சிபாளையம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறி நெசவு மேற்கொள்ளப்படுகிறது. கைத்தறி காட்டன் சேலை தயாரிப்புக்கான சாயமேற்றப்பட்ட நுôல்கள் சேலம், ஈரோடு மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். ஒரு சில நெசவாளர்கள், சொந்தமாக நுôல் வாங்கி, சேலை தயாரித்து நேரடியாகவும், ஜவுளிக்கடைகளுக்கும் விற்பனை செய்கின்றனர். ஒரு சிலர், ஜவுளி நிறுவனங்களிடம் மூலப் பொருள்களை பெற்று, கூலிக்கு நெசவு செய்து கொடுக்கின்றனர்.
 கோவை, மதுரை, சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளிக்கடைகள் மட்டுமன்றி, சிங்கப்பூர், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் நெகமம் காட்டன் சேலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பத்துக்கும் அதிகமான மொத்த காட்டன் சேலை ரக தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
 குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல், ஓணம், தீபாவளியின்போது ஆர்டரின் பேரில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும் விசேஷ பண்டிகைளின்போது கூடுதல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். சராசரியாக நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்யும் நிலையில், தீபாவளி, பொங்கல், ஓணம் பண்டிகைகள்போது 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் சேலைகள் வரை உற்பத்தி அதிகரிக்கின்றன. ஆனால், நடப்பு தீபாவளி பருவத்தில் எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கவில்லை எனவும், இதனால் உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எப்போதும் போலவே 2 ஆயிரம் சேலைகள் அளவிலே உற்பத்தி உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜி.எஸ்.டி.க்குப் பின் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து நெகமம் காட்டன் சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாச்சிமுத்து கூறுகையில்," பெரும்பாலும் நெசவாளர்கள் நெகமம் காட்டன் சேலைகளை இரண்டு நாள்களில் நெசவு செய்து விடுகின்றனர்.
 நூல்களுக்கு நிறமேற்றுதல் உள்ளிட்ட சில தொழில்நுட்பங்கள் நெகமம் சுற்றுப்பகுதியிலேயே மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய காட்டன் சேலை ரகங்களுடன் சுடிதாரும் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த ரகங்கள் ரூ.1,000 முதல் ரூ.3 ஆயிரம் வரைக்கும் விற்கப்படுகிறது.
 இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் நெகமம் காட்டன் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே ஆர்டர்கள் கிடைத்ததால் விற்பனையும் அதிகரித்தது. ஆனால், ஜி.எஸ்.டி.க்குப் பின் விற்பனை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த காலங்களில் 6 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் பெறப்பட்டு பல லட்சம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். ஆனால், நடப்பு ஆண்டு இதுவரையிலுமே புதிய ஆர்டர்கள் எதுவும் பெறப்படவில்லை. இதனால், எப்போதும் போலவே உற்பத்தி காணப்படுகிறது. விசைத்தறிகள் வந்தாலும் நெகமம் காட்டன் கைத்தறி சேலையின் தனித்துவத்தால் பெண்கள் பாரம்பரியமாக வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பொருளாதார சுணக்க நிலை, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவினை நம்பி 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கி நெசவாளர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெசவாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com