உங்களுக்குத் தெரியுமா? இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியுமா?

ஒரு நிதியாண்டிற்கு தேவையான நிதி, மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடப்போகும் நிதி மற்றும் முதலீடு செய்யப்போகும் தொகையின்
உங்களுக்குத் தெரியுமா? இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியுமா?

பட்ஜெட் என்பது சரி, அதுவென்ன இடைக்கால பட்ஜெட் என்கிறீர்களா... பொது பட்ஜெட் மற்றும் இடைக்கால பட்ஜெட்(interim Budget) ஆகியவற்றுக்கு நடுவே மலைக்கும், மடுவிற்குமான வித்தியாசங்கள் உள்ளது. அவற்றை குறித்து சுருக்கமாக இதில் பார்ப்போம்... 

பட்ஜெட் என்பது ஒரு நிதியாண்டிற்கு தேவையான நிதி, மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடப்போகும் நிதி மற்றும் முதலீடு செய்யப்போகும் தொகையின் விவரம், மேலும் கடந்த நிதியாண்டில் செலவிட்டதும், முதலீடு செய்ததன் மூலம் எவ்வளவு வருமானம் அரசுக்கு வந்திருக்கிறது என்பதையும் தெரிவிப்பதுதான் பட்ஜெட். இது கடந்த 2016-ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி தேதியன்று தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் 2017-ஆம் ஆண்டு இந்த நடைமுறையை மோடி தலைமயிலான பாஜக அரசு மாற்றி அமைத்தது. 2017-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் முதல் முறையாக பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இடைக்கால பட்ஜெட் - (interim Budget) :  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும், அவர்கள் என்ன வகையான திட்டங்களுக்கு மக்களின் பணத்தை செலவிடுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதனால், தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு தனது ஆட்சிக்காலம் வரை மட்டும் மக்கள் நலத்திட்டத்திற்கும், மற்ற இதர செலவுகளுக்கும் தேவையான நிதியை ஒதுக்கி அதிலிருந்து அரசு செலவிடப்போகும் நிதி விவரங்களை தெரிவிப்பதே இடைக்கால பட்ஜெட். பொது பட்ஜெட் என்பது ஒரு நிதியாண்டின் (ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டம்), முழுமைக்குமான வரவு செலவு திட்டமாகும். ஆனால் இடைக்கால பட்ஜெட் என்பது, நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கு மட்டுமேயானது. இதுபோன்ற சூழ்நிலையில் இரண்டு வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஒன்று இடைக்கால பட்ஜெட் மற்றொன்று செலவு அனுமதி கோரிக்கை(vote on account).

வரி விகிதங்களை மாற்றியமைக்காமல் சாதாரண ஒரு வரவு செலவு திட்ட ஒப்புதலுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டுமா? ஏற்கனவே, ஆரம்பித்து பல துறைகளிலும் நடைபெறும் திட்டங்களுக்கு நிதி தடைபடக்கூடாது என்பதும், ஊழியர்களுக்கான ஊதியங்கள் சென்று சேர வேண்டும் என்பதுதான். மேலும், பல்வேறு மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது, அங்கீகாரம் பெற போதிய கால அவகாசம் இருக்காது என்பதால் தேர்தல் காலங்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் பெரும்பாலும் வரி விதிப்பில் நடைமுறையில் மாற்றம் ஏதுவுமின்றியே தாக்கல் செய்யப்படும். அங்கீகாரம் பெற போதிய கால அவகாசம் இருக்காது என்பதால் தேர்தல் காலங்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எந்த கொள்கை முடிவையும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பது இல்லை. 

இடைக்கால பட்ஜெட் அறிமுகம்: இடைக்கால பட்ஜெட் நடைமுறையானது மத்திய முதல் நிதி அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் காலத்தில் இருந்தே அறிமுகம் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் இடைக்கால பட்ஜெட்டை, 1947-ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஆர்.கே. சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தல் வருவதற்கு முன், பிப்ரவரி 17-ஆம் தேதி அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 14-வது இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

15-வது இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் 2019 பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டில், கொள்கை முடிவுகளோ, அதிரடி சலுகைகளோ அறிவிக்கப்படாது என்பது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டுள்ள மரபாக இருந்து வருகிறது. 

இடைக்கால பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்?
அரசால் முழுமையான நிதிநிலையை தயாரிக்க முடியாதபோது அல்லது மக்களவைத் தேர்தல் சில மாதங்களில் வர உள்ளபோது ஆளும் அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் முக்கியமான தேவைகளுக்கு முதலில் நிதி ஒதுக்கப்படும். அதேநேரம் மக்கள் பல சலுகைகள் மற்றும் அறிவிப்புகளையும் எதிர்பார்க்கலாம்.

இடைக்கால பட்ஜெட் தேவையா?
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது ஒதுக்கப்படும் நிதியை அந்த நிதி ஆண்டின் இறுதி வரை அதாவது மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே செலவு செய்ய முடியும். ஒருவேளை முழு பட்ஜெட்டை அரசால் தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் புதிய ஆண்டு தொடங்கும்போது துறை ரீதியான செலவுகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டி வரும். இடைக்கால பட்ஜெட்டின்போது நாடாளுமன்றத்தில் vote on account  மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அடுத்த நிதி ஆண்டுக்கு தேவையான நிதியைப் பெற நாடாளுமன்றம் எளிதாக வாக்கெடுப்பின் மூலம் அனுமதியை வழங்கும். தேர்தல் நேரங்களில் vote on account  அனுமதி 4 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

பட்ஜெட்டிற்கும் - இடைக்கால பட்ஜெட்டிற்கும் என்ன வித்தியாசம்?
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும்போது vote on account-இன் கீழ் அரசின் செலவுகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். இதுவே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் அரசுக்கு தேவையான நிதியைக் கையாள முழு அனுமதியும் நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் வழங்கப்படும்.

புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியுமா?
இடைக்கால பட்ஜெட்டில் வரி விகிதங்களில் மாற்றம் செய்ய அனுமதி உண்டு. ஆனால் சில மாதங்களுக்குள் தேர்தல் வரும் என்பதால் பெரிய மாற்றங்கள் இருக்காது. மேலும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com