திருப்புமுனை திரைப்படங்கள்

ஓர் எழுத் தா ளன் தனி மை யில் அமர்ந்து தனது கால கட் டத் தைக் கடந்து ஒரு படைப்பை உரு வாக் க லாம். அதே போல் ஓர் ஓவி யன் ஒவி யத் தை யும் இசைக் க லை ஞன் ஓர் இசை வடி வத் தை யும் அமைக் க லாம். இவற் றின் உண்

ஓர் எழுத் தா ளன் தனி மை யில் அமர்ந்து தனது கால கட் டத் தைக் கடந்து ஒரு படைப்பை உரு வாக் க லாம். அதே போல் ஓர் ஓவி யன் ஒவி யத் தை யும் இசைக் க லை ஞன் ஓர் இசை வடி வத் தை யும் அமைக் க லாம். இவற் றின் உண் மை யான மதிப்பை பிற் கா லத் தில் வரும் தலை மு றை யி ன ரின் கலா சா ரம் மற் றும் புரிந் து கொள் ளும் அள வா லேயே மதிப் பிட முடி யும். அப் ப டிப் பட்ட எழுத் தா ளர் கள், ஓவி யர் கள், இசைக் கலை ஞர் கள் ஒரு வேளை அழிந் து போ க லாம்; ஆனால் அவர் க ளு டைய படைப்பு வாழும்.

ஆனால் கூட் டுப் படைப் பான சினி மா வைப் பொருத் த வரை போது மான அளவு ரச னையோ, புரிந் து கொள் ளு தலோ இல் லா வி டில் முத லில் அழி வது கலை ஞன் மட் டு மல்ல; அந் தக் கலைப் ப டைப் பும் அழிந் து வி டும்.

எவ் வ ளவு பெரிய மேதை யாக இருந் தா லும் தன் னு டைய கால கட் டத் தில் நில வும் ரசனை மற் றும் கருத் து களை மீறி ஒரு மிகச் சிறந்த படைப்பை உரு வாக் கு வது சிர ம மும் சிக் க லும் நிறைந்த காரி ய மா கும். ஆனால் இவற் றை யும் மீறி, சினிமா தோன் றிய கால கட் டத் தில் இருந்து இன்று வரை பல திரைப் ப டங் கள் - பல த ரப் பட்ட மக் க ளின் வாழ் வி ய லோடு பின் னிப் பிணைந் தி ருப் பதை மறுப் ப தற் கில்லை.

தமிழ்த் திரைப் ப ட வு ல கில், அப் ப டிப் பட்ட ஏரா ள மான படங் களி லி ருந்து குறிப் பி டத் த குந்த, குறிப் பாக... குறிப் பி டத் தகு தி யான பத்து திரைக் காவி யங் க ளைப் பற் றிய ஒரு மீள் பார்வை இது. இவை ய னைத் தும் தமிழ் சினி மா வு ல கில் திருப் பு மு னையை ஏற் ப டுத் தி யவை என் ப தில் இரு வேறு கருத் துக்கு இட மி ருக் காது என நம் ப லாம்.

தியா க பூமி - 1939

ஹரி தாஸ் - 1944

சந் தி ர லேகா - 1948

பரா சக்தி - 1952

அந்த நாள் - 1954

ரத் தக் கண் ணீர் - 1954

நாடோடி மன் னன் - 1958

நவ ராத் திரி - 1964

16 வய தி னிலே - 1977

நாய கன் - 1987

தியாகபூமி (1939)

இசை - பாபனாசம் சிவன், மேதிபாபு,  ராஜகோபால ஐயர். பாடல் - பாரதியார், பாபனாசம் சிவன், ராஜகோபால ஐயர், ஒளிப்பதிவு - சைலன்ஸ் போஸ். கலை - கே.ஆர்.சர்மா. படத்தொகுப்பு - ஆர்.ராஜகோபால். இயக்கம், தயாரிப்பு - கே.சுப்ரமணியன்.

தமிழ்த் திரைப்படவுலகில் எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி,  எஸ்.டி.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, பி.சரோஜாதேவி உள்ளிட்ட பல நட்சத்திரக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.சுப்ரமணியத்தின் படம். கே.ஜே.மகாதேவன், எஸ்.டி.சுப்புலட்சுமி, பாபநாசம் சிவன், ராஜகோபால ஐயர், வத்சலா, பேபி சரோஜா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தின் கதையை எழுதியவர் கல்கி. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு வெளியான இந்தப் படம் - பெண்களின் தனித்துவத்தை உணர்த்தி, பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற உண்மையை புரட்சிகரமாக வெளிப்படுத்தியது.

இங்கிலாந்திலிருந்து மேற்படிப்பு படித்துவிட்டு வரும் நாயகனுக்கு நாட்டுப்புறத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்து வைக்கிறார் செல்வந்தரான தந்தை. மனைவியுடன் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகமுடியாமல் சில நாள்கள் ஒப்புக்கு வாழும் கணவன், அவளைப் புறக்கணிக்கத் தொடங்குகிறான். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

இந்நிலையில் தனது கணவன், இங்கிலாந்தில்  ஏற்கெனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பதை மனைவி தன்னுடைய முயற்சியால் கண்டுபிடிக்கிறாள். படிப்பறிவு, பின்புலம் என ஏதும் இல்லாதபோதும் தன்னுடைய கணவனிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறாள். விசாரணைக்குப் பிறகு, விவாகரத்து வழங்கி, மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட கணவனிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டாம்; என்னுடைய குழந்தையையும் என்னையும் காப்பாற்றிக்கொள்ள என்னால் முடியும் எனக் கூறி ஜீவனாம்சத்தை மறுத்துவிட்டு வெளியேறுகிறாள் நாயகி. இதுதான் கதை.

பெண்ணியம், சம உரிமை, 33 சதவீதம், 50 சதவீதம் என்றெல்லாம் வெறுமனே பேசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கூட இப்படிப்பட்ட படங்களின் வரத்து இல்லாத சூழ்நிலையில் பெண்ணடிமை, மறுக்கப்பட்ட பெண் கல்வியறிவு, உடன்கட்டை ஏறுதல் போன்றவை நிலவிய அந்தக் கால கட்டத்தில் வெளியான இந்தப் படம்  திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற "தேச சேவை செய்ய வாரீர்...' என்ற பாடல், எந்த வகையிலும் பிரிட்டிஷ் அரசை தாக்காதிருந்தபோதும், "காங்கிரஸ் பிரசாரப் படம்' என்று கருதிய பிரிட்டிஷ் அரசு இந்தப் படத்தைத் தடை செய்தது. பிரிட்டஷ் அரசு தடை செய்த முதல் தமிழ்ப் படமும் இதுதான்.

இந்தப் படத்தை எப்படியும் தடை செய்துவிடுவார்கள் என எண்ணிய இயக்குநர் கே.சுப்ரமணியம், சென்னை கெயிட்டி திரையரங்கில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தப் படம் தொடர்ச்சியாக ஓடும்; மக்கள் இலவசமாகப் பார்க்கலாம் என விளம்பரம் செய்தார்.

ஏராளமான மக்கள் படத்தைப் பார்த்தனர். இரண்டு நாள்கள் இலவசமாக ஓடிய இந்தப் படம் மூன்றாவது நாள் தடை செய்யப்பட்டது. இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே பல வித்தியாசமான புகைப்படங்களுடன் ஆனந்தவிகடன் இதழில் தொடர்கதையாகவும் வெளிவந்தது.

ஹரிதாஸ் (1944)





வசனம் - இளங்கோவன். இசை - ஜி.ராமநாதன். பாடல் - பாபனாசம் சிவன். ஒளிப்பதிவு - ஆதிஇரானி, டி.முத்துசாமி. கலை - எச்.சாந்தாராம். படத்தொகுப்பு, இயக்கம் - சுந்தர்ராவ் நட்கர்னி. தயாரிப்பு - ராயல் டாக்கீ டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்.

தினான்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த படம். பாகவதர் நடித்த 14 படங்களில் பெரும்பாலானவை ஒரு வருடத்துக்கும் மேல் ஓடிச் சாதனை படைத்தவை. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது "ஹரிதாஸ்'.

டி.ஆர்.ராஜகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், பி.பி.ரங்காச்சாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், ஹரிணி, ராதாபாய் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் சுந்தர்ராவ் நட்கர்னி. 1944 ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த இந்தப் படம் 1945, 1946 என மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

இத்தனைக்கும் இந்தப் படத்தில் பாகவதர் பெண் பித்தர் வேடத்தில் ஆன்டி ஹீரோவாக நடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு இந்தப் படத்தின் மூலம் அதிக பெண் ரசிகைகள் உருவாகினர். இந்தப் படத்தின் மிகப் பெரும் வெற்றிக்கு பாகவதரின் குரலில் ஒலித்த பாடல்களே முக்கியக் காரணம்.

சாருகேசி ராகத்தில் அமைந்த "மன்மத லீலையை வென்றார் உண்டோ...' என்ற பாடலைக் கேட்டு மயங்காதவர்களே இல்லை. படம் வெளிவந்த காலகட்டத்தில் - சித்தூர் சுப்ரமணியம், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், ஜி.என்.பாலசுப்ரமணியன், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற தொழில்முறையிலான மாபெரும் கர்நாடக இசைக் கலைஞர்களே பாகவதரின் திரையிசைப் பாடல் திறமையில் மெய்மறந்தனர். படத்தில் இடம்பெற்ற "வாழ்வினிலே ஒரு திருநாள்...', "அன்னையும் தந்தையும்...', "கிருஷ்ணா முகுந்தா...' போன்ற பாடல்கள் தமிழ் ரசிகர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தன.

இந்தப் படத்தின் மூலம் பாகவதருக்கு பெரிய கம்பெனிகளின் 10 புதிய பட வாய்ப்புகள் கிடைத்தன. இதை பெரிய அளவில் கொண்டாட எண்ணிய பாகவதர் "ஹரிதாஸ்' படத்தில் இடம்பெற்ற வெள்ளைக்குதிரை மீது அமர்ந்தவாறு... 10 புதிய பட வாய்ப்புகளைக் குறிக்கும் வகையில் 10 கொடிகளுடன் தான் இருக்கும் புகைப்படங்களை அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்தார். இங்குதான் "கண்திருஷ்டி' குறித்து பலரும் குறிப்பிடுகிறார்கள். இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே - சினிமா நடிகர், நடிகைகளைப் பற்றி கிசுகிசு எழுதி வந்த - லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

தனது 10 புதிய பட வாய்ப்புகள் குறித்து விளம்பரம் வெளியிட்ட சில நாள்களில் பாகவதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விளம்பரம் பலரின் கண்களை உறுத்தியதுதான் பாகவதருக்கு திருஷ்டியாகிவிட்டது என பலரும் கூறுவதுண்டு. பாகவதர் சிறைக்குச் சென்றுவிட்டார்; இனி அவருடைய படங்களைப் பார்க்க முடியாது; மனதை மயக்கும் பாடல்களை அவரது காந்தக்குரலில் கேட்கமுடியாது என நினைத்தே "ஹரிதாஸ்' படத்தைப் பலரும் மீண்டும் மீண்டும் பார்த்தனர்; அதன் காரணமாகவே அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது எனக் கூறுவோரும் உண்டு.

சந்திரலேகா (1948)

கதை,வசனம் - கே.ஜே.மகாதேவன், கிட்டு, நயினா, கொத்தமங்கலம் சுப்பு. இசை - எஸ்.ராஜேஸ்வரராவ். பாடல் - பாபனாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு. ஒளிப்பதிவு - கமல்கோஷ். கலை - ஏ.கே.சேகர். படத்தொகுப்பு - சந்துரு. நடனம் - ஜெயசங்கம், நடராஜ். தயாரிப்பு, இயக்கம் - "ஜெமினி' எஸ்.எஸ்.வாசன்.

இந்திய சினிமாவின் முதல் பிரமாண்டமான படம். அந்தக் காலத்திலேயே | 30 லட்சம் செலவில் (இன்றைய மதிப்பில் "எந்திரன்' பட்ஜெட்டை விட அதிகம், அதாவது சுமார் | 140 கோடி). ஐந்து ஆண்டுத் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் எம்.கே.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி, ரஞ்சன், சுந்தரிபாய், என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம் உள்பட ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்காக, அதுவரை தான் சம்பாதித்த அனைத்து தொகையையும் தைரியமாக முதலீடு செய்தார் தயாரிப்பாளரான ஜெமினி எஸ்.எஸ்.வாசன். படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பை நடத்த முடியாமல் தவித்தவருக்கு அவரது தாயார் தனது ஒட்டுமொத்த நகைகளையும் அளித்து உதவினார். படம் சிறப்பாக வந்திருந்தாலும் ஏதோ ஒரு குறை வாசனின் மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது. அந்த சமயத்தில், லஷ்மிகாந்தன் கொலை வழக்கில் இருந்து விடுதலையாகி சிறையிலிருந்து வந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். அவரிடம் படத்தைக் காட்டி தகுந்த இடங்களில் நகைச்சுவைக் காட்சிகளைப் புகுத்தி படத்தின் விறுவிறுப்பைக் கூட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் வாசன். என்.எஸ்.கே.வும் சர்க்கஸ் பற்றிய இந்தப் படத்தில் ஒரு கோமாளி வேடத்தை உருவாக்கி சிறப்பான நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தார். வாசன் நினைத்தது போல படம் உருவானது. ‘3 ஙண்ப்ப்ண்ர்ய் ஈர்ப்ப்ஹழ் டழ்ர்க்ன்ஸ்ரீற்ண்ர்ய்’ என ஆங்கிலத்தில் விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டார். படம் அனைத்துத் தரப்பினரிடமும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

ஆனால் இப்போது போல ஒரே நேரத்தில் 2000, 3000 திரையரங்குகளில் வெளியாகாததால் முதலீடு செய்த பணம் வருவதற்கு ஆண்டுகள் ஆகலாம் என நினைத்த வாசன், படத்தை ஹிந்தியிலும் எடுக்கத் திட்டமிட்டார். அதன்படி ஹிந்தியிலும் படம் உருவானது. ஹிந்திப் பதிப்பின் விளம்பரம் இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியது. மும்பையில் படங்களுக்கு பேனர்கள் கூட வைக்கப்படாத காலம் அது. தமிழகத்திலிருந்து ஓவியர்கள், கலை இயக்குநர்கள் எனப் பலரையும் மும்பைக்கு அழைத்துச் சென்று நகர் முழுவதும் பேனர்களை வைத்தார் எஸ்.எஸ்.வாசன்... அதுவும் எப்படி? முதல் இரண்டு நாள்கள் ஜெமினியின் சின்னமான "இரண்டு குழந்தைகள் குழல் ஊதுவது போன்ற படங்கள்' நகரை அலங்கரித்தன. குழந்தைப் பராமரிப்புக்கான விளம்பரமா? வானொலிகளுக்கான விளம்பரமா? அல்லது வேறு ஏதாவதா என மக்கள் குழப்பமுற்றனர். அடுத்த நாள் "ஜெமினி' என்ற பெயர் மட்டும் அந்த பேனர்களில் சேர்க்கப்பட்டது. சினிமாக்காரர்கள் ஓரளவு புரிந்துகொண்டாலும் பொதுமக்களுக்குப் புரியவில்லை; அடுத்த நாள் "சந்திரலேகா' என்ற பெயர் சேர்க்கப்பட்ட பிறகுதான் மக்களுக்கு அது படத்தைப் பற்றிய விளம்பரம் என புரிந்தது. ஏனென்றால் "சந்திரலேகா' தமிழில் வெளியானபோதே ஆங்கிலப் படங்களுக்கு நிகரான அதன் பிரமாண்டம், பட்ஜெட், கதையமைப்பு, முரசு நடனம் போன்ற விஷயங்கள் பத்திரிகைகள் வாயிலாக இந்தியா முழுவதும் பரவியிருந்தது. இவ்வாறு ஹிந்தியில் வெளியான "சந்திரலேகா' தரத்திலும் வசூலிலும் சாதனை படைத்தது. ஆங்கில சப் டைட்டில்களுடன் உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்துக்காக 700 பிரிண்டுகள் எடுக்கப்பட்டது, மிகப் பெரிய சாதனையாக அமைந்தது.

பராசக்தி (1952)

கதை - எம்.எஸ்.பாலசுந்தரம். வசனம் - மு.கருணாநிதி. இசை - சுதர்சனம். பாடல் - பாரதியார், பாரதிதாசன், மு.கருணாநிதி, அண்ணல் தாங்கோ, உடுமலை நாராயணகவி, கே.ஆர்.காமாட்சி. இயக்கம் - கிருஷ்ணன் பஞ்சு. ஒளிப்பதிவு - மாருதிராவ். தயாரிப்பு - நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் முதலியார்.

எண்ணிக்கையில் முப்பது, நாற்பது என பாடல்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை பரபரப்பான வசனங்கள் மூலம் வசப்படுத்திய முக்கியமான படம்.

பிரபல திரைப்பட விநியோகஸ்தரான பெருமாள் முதலியார், நாடகங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த சிவாஜிகணேசனை வைத்து முதல்முறையாக ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்ததுதான் "பராசக்தி' நாடகம். இதை ஏவி.எம்.ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரித்தார்  பெருமாள் முதலியார். கதையைக் கேட்டு சம்மதித்த ஏவி.மெய்யப்பச் செட்டியார் பட வேலைகளைத் தொடங்கினார். படம் ஆரம்பித்த சில நாள்களிலேயே ஏவி.எம்.முக்கு சிவாஜி

கணேசன் நடிப்பதில் ஆர்வமில்லை. அவரை நீக்கிவிட்டு வேறு ஒரு பிரபல நடிகரை வைத்துப் படத்தை எடுக்கும்படி பெருமாள் முதலியாரிடம் ஏவி.எம். வலியுறுத்தினார். சிவாஜிகணேசனின் நடிப்புத் திறமைக்காகவே ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்த பெருமாள் முதலியார் இதற்கு உடன்படவில்லை. சிவாஜிகணேசனைத் தொடர்ந்து நடிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இறுதியில் அண்ணாவிடம் தனது நிலையைக் கூறி, இந்த விஷயத்தில் ஏவி.எம்.மைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என வேண்டினார் பெருமாள் முதலியார். அண்ணா தலையிட்ட பிறகே சிவாஜிகணேசன் ஹீரோவாக படத்தில் தொடர்ந்து நடிக்க முடிந்தது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, பண்டரிபாய், ஸ்ரீரஞ்சனி, வி.சுசிலா, டி.பி.முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த "பராசக்தி' படம் மிகச் சிறப்பாக உருவாகி திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் மு.கருணாநிதியின் வசனங்களில் இடம்பெற்ற சீர்திருத்தக் கருத்துகளிலும் வார்த்தை ஜாலங்களிலும், சிவாஜிகணேசனின் நடிப்பிலும் மெய்மறந்தனர். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கருணாநிதியின் வசனம் என்பதால் பல காட்சிகள் தணிக்கைக் குழுவினரால் நீக்கப்படவுள்ளது; படத்தையே தடை செய்யப் போகிறார்கள் என வதந்தி பரவியது. அதனால் படத்தை சீக்கிரமே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலால் மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதியது; படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் பணியாற்றிய பலரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றனர். திரைத்துறையில் நடிக்க விரும்பும் பலரும் "பராசக்தி'யின் வசனங்களைப்  பேசி,நடித்து, பயிற்சி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அளவுக்கு, இன்றளவும் இந்த வசனங்கள் வீரியத்தோடு திகழுகின்றன. தமிழ்த் திரையுலகில் வசனகர்த்தாக்களுக்கு பெரிய மரியாதையையும் உரிய வருவாயையும் உருவாக்கித் தந்ததில் "பராசக்தி' முன்னோடியாகத் திகழ்ந்தது.

ரத்தக் கண்ணீர் (1952)

கதை - திருவாரூர் கே.தங்கராசு, இசை - சிதம்பரம் ஜெயராம். பாடல் - பாரதியார், பாரதிதாசன், உடுமலை நாராயணகவி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி. ஒளிப்பதிவு - ஆர்.ஆர்.சந்திரன். இயக்கம் - கிருஷ்ணன் பஞ்சு. தயாரிப்பு - நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார்.

1938-ல் "ராஜசேகர்' படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்த எம்.ஆர்.ராதா, திரையுலகின் போக்கு பிடிக்காததால் மீண்டும் நாடகத்துறைக்கே திரும்பி சீர்திருத்த நாடகங்களை நடத்தி வந்தார். சினிமாவில் நடிக்க பலர் அழைத்தும் இன்னொருவர் சொல்வதைக் கேட்டு நடிப்பது தனக்கு ஒத்துவரவில்லை எனக் கூறி மறுத்துவந்தார். இந்நிலையில் "பராசக்தி' படத்தைத் தயாரித்த பெருமாள் முதலியார், எம்.ஆர்.ராதாவின் "ரத்தக் கண்ணீர்' நாடகத்தை சிவாஜிகணேசனை வைத்துத் தயாரிக்க விரும்பினார். எனவே அதற்கான உரிமையை எம்.ஆர்.ராதாவிடம் கேட்டார். ஆனால், அதற்கு எம்.ஆர்.ராதா உடன்படவில்லை.

மேலும் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் கண்டுகளித்து பலமுறை வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்ட "ரத்தக் கண்ணீர்' நாடகத்தைத் திரைப்படமாக எடுத்தால் அது வெற்றி பெறாது என பலரும் பயமுறுத்தினர். ஆனால், அந்த நாடகத்தைப் படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் பெருமாள் முதலியார். "பராசக்தி' படத்துக்குப் பிறகு அவர் தயாரிக்க எண்ணிய படமும் இதுதான். அதனால் அவருடைய முயற்சி தொடர்ந்தது. பெருமாள் முதலியாரின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகு "ரத்தக் கண்ணீர்' நாடகத்தைப் படமாக்கவும் அதில் கதாநாயகனாக நடிக்கவும் சம்மதித்து திரையுலகில் மறுபிரவேசம் செய்தார் எம்.ஆர்.ராதா. படத்தில் இடம்பெறும் தாசி வேடத்தில் நடிக்க பல நடிகைகள் பயந்தனர். இறுதியில் எம்.என்.ராஜம் தைரியமாக நடித்தார். எஸ்.எஸ். ராஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, சந்திரபாபு, எஸ்.ஆர்.ஜானகி, அங்கமுத்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். எம்.ஆர்.ராதாவின் நிகரற்ற நடிப்பு, படத்தில் இடம்பெற்ற நையாண்டி வசனங்கள், எம்.ஆர்.ராதாவின் மேக்-அப், சூப்பர் ஹிட் பாடல்கள், கிருஷ்ணன் பஞ்சுவின் நேர்த்தியான இயக்கம் போன்றவற்றால் படம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த ஒருவர், முதல்முறையாக கதாநாயகனாக நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதும் இந்தப் படத்தில்தான்.  இதற்குப் பிறகு எம்.ஆர்.ராதா, நட்சத்திர அந்தஸ்து பெற்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவரானார்.

அந்தநாள் (1954)

வசனம் - ஜாவர் சீதாராமன். ஒளிப்பதிவு - மாருதிராவ். கலை - ஏ.பாலு. படத்தொகுப்பு - சூர்யா. கதை, இயக்கம் - வீணை எஸ்.பாலசந்தர். தயாரிப்பு - ஏவி.எம்.

தமிழ்த் திரையுலகில் முதல்முறையாக பாடல்கள், நடனம், சண்டைக் காட்சிகள் இல்லாமல் உருவான பெருமைக்குரிய படம். "பராசக்தி' என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்து, நட்சத்திர நடிகராக வலம் வரத் தொடங்கிய கால கட்டத்திலேயே சிவாஜிகணேசன் வில்லனாக நடித்த படம். சுயநலத்துக்காக தேசத்

துரோகம், மனைவிக்குத் துரோகம் புரியும் வேலையில்லாப் பட்டதாரி வேடத்தில் சிவாஜிகணேசன் சிறப்பாக நடித்த படம். இந்தப் படத்தின் கதையை உருவாக்கிய இயக்குநர் 

எஸ்.பாலசந்தர், ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் சென்று பாடல், நடனம், சண்டை இல்லாமல் புதிய பாணியில் இந்தப் படத்தை எடுக்கவுள்ளேன்; தாங்கள்தான் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டவுடன் ஏவி.எம். அதிர்ந்துவிட்டார். ஏனெனில் "சரஸ்வதி ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் கிராம போன்கள், இசைத் தட்டுகள், ஒலிக் கருவிகள் விற்பனைசெய்து படவுலகில் காலூன்றியவர் ஏவி.எம். அப்படிப்பட்டவரிடம் பாடல்கள், நடனம் இல்லாமல் ஒரு படம் என்று கூறினால்..! இருந்தாலும் புதிய விஷயங்களையும் திறமையுள்ளவர்களையும் மதிக்கும் குணம் கொண்ட ஏவி.எம்., படத்தின் கதை பிடித்துப்போனதால் தயாரிக்கச் சம்மதித்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு சிவாஜிகணேசனை நடிக்க வைக்க

முடிவானது. ஆனால் ஹீரோவாக உள்ள அவர், வில்லனாக நடிக்கச் சம்மதிப்பாரா? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், "அந்த நாள்' கதையைக் கேட்ட சிவாஜிகணேசன், ஒரே பாணியில் நடித்துக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். இதுபோன்ற சவாலான வேடங்களில் நடித்தால்தான் ஒரு நடிகனின் இன்னொரு பரிமாணம் தெரிய வரும். அதனால் வில்லன் வேடத்தில் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். சிவாஜிகணேசனின் இந்த தைரியமான மனோபாவம்தான், பிற்காலத்தில் அவருக்குப்

பல்வேறுவிதமான வேடங்களைப் பெற்றுத் தந்து நடிப்பில் அவருடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தியது. வித்தியாசமாக உருவான "அந்த நாள்' வெளியானது. படம் தொடங்கியவுடன், சிவாஜிகணேசன் சுடப்பட்டு இறந்துவிடுவது போன்ற முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆரம்பத்திலேயே சிவாஜிகணேசன் இறந்துவிடுகிறார். இனி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்காது; சிவாஜி பெயரைச் சொல்லி ஏமாற்றிவிட்டனர் என ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். திரையரங்கைச் சேர்ந்தவர்கள் சமாதானப்படுத்தி படத்தைப் பார்க்கச் செய்தனர்.

அதன் பிறகே கதையமைப்பில் கையாளப்பட்ட புதுமைகளையும் ப்ளாஷ்பேக் காட்சிகளையும் கண்டு ரசிகர்கள் வியக்க... தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்துக்கான வளர்ச்சி, அந்த நாளில் தொடங்கியது.

ரசிகர்களின் ரசனைத்திறனை மேம்படுத்த முயற்சித்த இந்தப் படம், முதலில் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த வெளியீடுகளில் வெற்றிப் படமாக அமைந்தது. படம் தேசிய விருது பெற்றது.

நாடோடி மன்னன் (1958)

வசனம் - எஸ்.ரவீந்தர். இசை - எஸ்.எம்.சுப்பையா நாயுடு, என்.எஸ்.பாலகிருஷ்ணன்,  ஆத்மநாதன். பாடல் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பி.பாஸ்கரன், நாராயணபாபு, விஜயநரசிம்ஹா,சுரதா.

படத்தொகுப்பு - கே.பெருமாள். ஒளிப்பதிவு - ஜி.கே.ராமு. தயாரிப்பு, இயக்கம் - எம்.ஜி.ராமச்சந்திரன்.

புரட்சி நடிகர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் படம். பானுமதி, சரோஜாதேவி, எம்.என்.ராஜம், ஜி.சகுந்தலா, நம்பியார், சக்கரபாணி, வீரப்பா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தின் முதல் பாதி கருப்பு-வெள்ளையிலும் இரண்டாம் பாதி வண்ணத்திலும் உருவானது. படத்தின் கதாநாயகியாக பானுமதி 

ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. பானுமதி கதாநாயகியாக நடித்த "ரத்னகுமார்', "ராஜமுக்தி' போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். சிறு வேடங்களில்

நடித்தவர். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பிற்காலத்தில் முன்னணி நடிகராகவும் வசூல் நாயகனாகவும் முன்னேறினார். இருப்பினும் "ஈகோ' காரணமாக, படப்பிடிப்பில் பானுமதி சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றே திரைத்துறையைச் சேர்ந்த பலரும் குறிப்பிடுகின்றனர். தான் தயாரித்து இயக்கும் முதல் படத்திலேயே நேர்ந்த இத்தகைய அனுபவத்தைத் தொடர விரும்பாத எம்.ஜி.ஆர்., படத்தின் கதையில் மாற்றம் செய்தார். படத்தின் முதல் பாதி வரை கதாநாயகியாக நடித்த பானுமதியை இடைவேளைக்குப் பிறகு புகைப்படத்தில் மட்டுமே காட்டினார். இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் ஆலோசனையின்பேரில் பி.சரோஜாதேவியை இன்னொரு கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதற்கேற்றவாறு கதையிலும் மாற்றம் செய்திருந்த எம்.ஜி.ஆரின் யுக்தி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற அரண்மனைக் கோட்டை, மலைக்குகை "செட்'டுகள் பிரமிப்பை ஏற்படுத்தின.

அந்தக் காலத்திலேயே பெரும் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்துக்காக எம்.ஜி.ஆர்., அதுவரை தான் சம்பாதித்த தொகை முழுவதையும் தைரியமாக முதலீடு செய்தார். சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் படத்தின் வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பியவாறே இருந்தனர். படம் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர். மன்னன் ஆவார்; இல்லாவிட்டால் நாடோடிதான் என்று திரையுலகிலும் எதிர்தரப்பிலும் பேச்சு இருந்தது. இதுவே படத்துக்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதுவரை கருப்பு-வெள்ளைப் படங்களைப் பார்த்துவந்த ரசிகர்களுக்கு, கலரில் உருவாக்கப்பட்ட படத்தின் இரண்டாம் பாதி புதிய அனுபவத்தைத் தந்தது. படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும் சூப்பர் ஹிட் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. எம்.ஜி.ஆர். வசூல் மன்னன் ஆனார்.

நவராத்திரி (1964) இசை - கே.வி.மகாதேவன். கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு  ஏ.பி.நாகராஜன்.

தமிழ்ச் சினிமாவில் பிரமிப்பை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று. சிவாஜிகணேசன் ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த படம். தனக்குப் பிடிக்காத மணமகனுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறும் ஒரு பெண், ஒன்பது நாள்களில் ஒன்பது வித்தியாசமான மனிதர்களைச் சந்த்திக்கிறாள். அந்த ஒன்பது கதாபாத்திரங்களிலும் சிவாஜிகணேசனே நடித்திருந்தார். ஒவ்வொருடனும் ஒவ்வொரு நாளும் நாயகி எதிர்கொள்ளும் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருந்தது. ஒன்பதாம் நாள் வீடு திரும்பும் நாயகிக்கு, தான் காதலித்தவனைத்தான் வீட்டினர் மணமகனாகத் தேர்ந்தெடுத்தது தெரிய வரும். ஒன்பது மாறுபட்ட கதாபாத்திரங்களில் சிவாஜிகணேசன் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மேக்-அப் தொழில்நுட்ப வளர்ச்சியில்லாத அந்தக் காலகட்டத்திலேயே சிவாஜியின் வித்தியாசமான மேக்-அப், மேனரிஸம், இறுதிக் காட்சியில் எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றாக சேர்ந்திருக்கும் காட்சி போன்றவை

ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தின. இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்துக்கும் ஈடாக சாவித்ரியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தெலுங்கு பேசும் சமூகத்திலிருந்து வந்தவராக இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகளின் "ராஜாதிராஜன் வந்தானடி...' என்ற தெருக்கூத்துப் பாடலை அட்சரம் பிசகாமல் சொந்தக் குரலில் பாடி அசத்தினார். இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடித்த பிறகுதான் சாவித்ரிக்கு நடிகையர் திலகம் என்ற பட்டம் கிடைத்தது.

இது சிவாஜிகணேசனின் 100-வது படம். இதே காலகட்டத்தில் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் சிவாஜி நடித்த "முரடன் முத்து' படமும் உருவானது. "முரடன் முத்து'தான் அவருடைய 100-வது படம் என அந்தப் படத் தரப்பு தெரிவித்தாலும் தனக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் 

"நவராத்திரி'யைத்தான் தனது 100-வது படமாக அறிவித்தார் சிவாஜிகணேசன். அதன்படி 03-11-1964 அன்று காலை முதலில் வெளியான "முரடன் முத்து' 99-வது படமாகவும் அதே நாளில் அடுத்த காட்சியிலிருந்து வெளியான "நவராத்திரி' 100-வது படமாகவும் கருதப்பட்டது. படம் பெரிய வெற்றியைப் பெற்றது; சிவாஜிகணேசன் நடிப்புலகச் சக்கரவர்த்தியாகக் கொண்டாடப்பட்டார்.

16 வயதினிலே (1977)

வசனம் - கலைமணி. இசை - இளையராஜா. பாடல் - கண்ணதாசன், கங்கை அமரன், ஆலங்குடி சோமு. ஒளிப்பதிவு - பி.எஸ்.நிவாஸ். கலை - சோமநாத், கமலசேகரன். படத்தொகுப்பு - பாஸ்கரன். கதை, திரைக்கதை, இயக்கம் - பாரதிராஜா. தயாரிப்பு - எஸ்.ஏ.ராஜ்கண்ணு.

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய படம். ஸ்டுடியோக்களிலும் செயற்கையான "செட்'டுகளிலும் உருவாகி வந்த தமிழ் சினிமாவை வேறொரு புதிய தளத்துக்கு இட்டுச் சென்ற படம்.

 ஒப்பனை இல்லாத யதார்த்தமான கிராமத்து மனிதர்கள், மண் மணத்துடன் கூடிய மக்களின் வாழ்வியல் நடைமுறைகள் என ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்குத் தந்தது. பாரதிராஜா இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். குறிப்பாக, அப்போது அழகான ரொமான்டிக் ஹீரோவாக வலம் வரத் தொடங்கிய கமல்ஹாசன், இந்தப் படத்தின் கதைக்கேற்ப தன்னை அவலட்சணமாக மாற்றிக்கொண்டும் சில காட்சிகளில் கோவணம் கட்டிக்கொண்டும் தைரியமாக நடித்தார். ரஜினிகாந்தின் வில்லத்தனமும் அவருடைய "இது எப்டி இருக்கு?‘ பஞ்ச் வசனமும் சாமானிய ரசிகனிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பெரிய பலமாக அமைந்தன. முதல் முறையாக யதார்த்தமான ஒரு கிராமத்துக் கதையைக் கண்டு வியந்த ரசிகர்களால் படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு கிராமங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக்கான மீதான ஆர்வம் தமிழ் சினிமாவில் அதிகரித்தது.

நாயகன் (1987)



ட்ஃபாதர்' ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டாலும் தமிழுக்கு ஏற்ப கதையிலும்

காட்சியமைப்பிலும் பல மாற்றங்களுடன் வெளியான இந்தப் படம் அனைத்துத் தரப்பு

ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்து பெரும் வெற்றி பெற்றது. இயல்பான வசனங்கள், அருமையான பின்னணி இசை, சிறப்பான கலை உருவாக்கம், நேர்த்தியான இயக்கம் எனப் படத்தின் ஒவ்வோர் அம்சத்திலும் அழகியல்தன்மை வெளிப்பட்டது. . தொடர்ந்து பல  ஆண்டுகளாக அடர்த்தியான மீசையுடன் நடித்து வந்த கமல்ஹாசன், இந்தப் படத்தில் முதல்முறையாக மீசையில்லாமல் நடித்திருந்தார். குழந்தைப் பருவம் முதல் வயோதிகம் வரையிலான கமல்ஹாசனின் கதாபாத்திரம் மிகையில்லாமல் யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. மும்பை வாழ் தமிழரான வரதராஜ முதலியாரைப் பற்றிய இந்தப் படம் - தெலுங்கு, ஹிந்தியில் டப் செய்யப்பட்டாலும் பல மாநிலங்களில் தமிழிலேயே வெளியாகி வசூல் சாதனை புரிந்தது. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இது 400-வது படமாக அமைந்தது. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இரண்டாவது முறையாகக் கிடைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு இந்திய அளவில் மணிரத்னம் சிறந்த இயக்குநராகக் கவனம் பெற்றார்; தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் ஆனார். நாயகனுக்குப் பிறகு வெளிவந்த அவருடைய படங்கள் தமிழகத்தைத் தாண்டி இந்திய அளவில் வியாபார ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com