ஒன்ஸ்மோர்

ஜப்பானில் வாழ்ந்த ரின்சாய் அவர்கள் மிகப்பெரிய சென் (ழங்ய்) ஞானியாவார். இவர் போதி தர்மர் பாதையில் நடந்த
ஒன்ஸ்மோர்

ஜப்பானில் வாழ்ந்த ரின்சாய் அவர்கள் மிகப்பெரிய சென் (ழங்ய்) ஞானியாவார். இவர் போதி தர்மர் பாதையில் நடந்த மறைஞானி. இவர் சொற்கள் இல்லாமல் ஞானத்தைப் பரப்பியவர். ஜப்பானில் ரின்சாய் சென் தத்துவம் மிகவும் பிரபலமானது. அவற்றில்  "ஒரு கை ஓசையைக் கேளுங்கள்' என்பது மிக மிகப் பிரபலமானது.

 தன்னை நாடி வரும் சீடர்களுக்கு ரின்சாய் முதலில் கூறுவது ""இரண்டு கைகளைத் தட்டும்போது ஓசை கிளம்புகிறது. ஒரு கையின் ஓசையை செவிமடுத்துக் கேளுங்கள்'' என்பார். ஒருநாள் ஒரு சீடர் அவரிடம் வந்து தான் ஒரு கை ஓசையைக் கேட்டதாகச் சொல்ல அதை விவரிக்கச் சொல்கிறார் ரின்சாய்.

 சீடன் "அது இலைகளின் ஊடே காற்று கடந்து செல்வது போன்று இருந்தது' என்கிறார். "காற்றும் இலையும் இரண்டு பொருள்கள் அவை ஒன்றல்ல' என்றார் ரின்சாய். பல மாதங்களுக்குப் பிறகு சீடன் மீண்டும் மறைஞானியைச் சந்தித்து, "கேட்டு விட்டேன். கூரையின் மீது மழைத்துளி விழும் ஓசை அது' என்றார். மறைஞானி அதையும் மறுத்தார்.

 பல வருடங்கள் ஆகின. அந்தக் குறிப்பிட்ட சீடரைக் காணவேயில்லை! அந்தச் சீடரைத் தேடிக் கண்டுபிடித்து வர தனது மற்றைய சீடர்களை மறைஞானி அனுப்பினார். எங்கெங்கோ தேடி அலைந்து கடைசியில் அந்தக் குறிப்பிட்ட சீடனை அழைத்து வந்தனர். அவனைப் பார்த்ததும் ரின்சாய், ""இப்போது நீர் அந்த ஓசையைக் கேட்டு விட்டீர்'' என்றார்! அதற்கு அந்த சீடன், ""ஆமாம்.. ஒரு கை ஓசையைக் கேட்டு விட்டேன்!'' என்றான். அதற்குத் தலையை அசைத்தார். சீடன், ""அது பிரபஞ்ச ஒலி. அது எவ்வித உராய்வும் இன்றி எழுகின்ற ஒலி. அது பிறப்பிடமற்றது தோற்றுவிக்கப்படாதது மனதைக் கடந்து மனமற்ற (சர்-ம்ண்ய்க்) வெறுமைக்குள், மனமற்ற நிலையில், தனி ஒரு கையின் அசைவிலிருந்து வரும் ஓசையைக் கேட்டேன். கூர்மையாகக் கேட்டால் அதுபோலவே பிரபஞ்ச ஓசையும்'' என்றார்.

 இந்த ஒலியைத்தான் இந்துக்கள் "ஓம்' எனவும் கிறிஸ்தவர்கள் "ஆமென்' எனவும் இஸ்லாமியர்கள் "ஆமீன்' எனவும் அழைக்கின்றனரா? இதுவே உலகத்தின் பொது "ஒலி'. ஆங்கிலத்தில் எங்கும் நிறைந்தவர் (ஞம்ய்ண் ல்ழ்ங்ள்ங்ய்ற்) எல்லாம் அறிந்தவர் (ஞம்ய்ண் ள்ஸ்ரீண்ங்ய்ற்) எல்லாம் வல்லவர் (ஞம்ய்ண் ல்ர்ற்ங்ய்ற்) என்று கூறும்போது அதனுள் "ஓம்' (ஞம்ய்) "ஆமென்', "ஆமீன்' உள்ளடங்கியிருக்கிறதுபோல் தெரிகிறது.

("போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்' என்ற நூலில் எஸ்.குருபாதம்).

காட்டிலுள்ள மிருகங்களைக் கண்ட மாத்திரத்தில் இது சிங்கம், இது புலி, இது கரடி, இது நரி என்று நாம் சுலபமாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் இதைப்போல நாட்டில் நாம் சந்திக்கின்ற மனிதர்களைச் சந்தித்த மாத்திரத்தில் இவன் நல்லவன், இவன் கயவன் என்று சொல்ல முடியவில்லையே? இதனைத் திருவள்ளுவர் தம் குறள் ஒன்றில் "மக்களே போல்வர் கயவர்; அவரன்ன ஒப்பார் யாம் கண்டது இல்' என்று குறிப்பிடுகிறார். இதே கருத்தை பாரதி இன்னும் தெளிவாக "மனிதன்' என்ற தம் கட்டுரை ஒன்றில் எழுதுகிறார்.

 மனிதர்களைக் கவனிக்குமிடத்து எத்தனையோ விதமான மிருகங்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

 வஞ்சனையாலும் தந்திரத்தாலும் சமயத்துக்கேற்ப பலவிதக் காட்சிகள் செய்து ஜீவிப்பவன் நரி.

 ஊக்கம் இல்லாமல் ஏதேனும் ஒன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து தலைகவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.

 மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

 தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் சுகத்தில் மூழ்கிக் கிடப்பவன் பன்றி.

 சுயாதீனத்தில் இச்சையில்லாமல் பிறருக்குப் பிரியமாய் நடந்துகொண்டு அவர்கள் கொடுப்பதை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்.

 காங்கிரஸ் சபையில் சேர்ந்து கொண்டு ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இதமாக நடக்க வேண்டும் என்ற விருப்பமுடையவன் வெளவால். தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரிப்பவன் கழுகு. ஒரு புது உண்மை  வரும்போது அதை ஆவலோடு வரவேற்காமல் வெறுப்பு அடைகிறவன் (வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்) ஆந்தை. கண்ட விஷயங்களில் எல்லாம் திடீர் திடீரென்று கோபம் அடைபவன் வேட்டை நாய்.

 பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும் அவன் அச்சிரமத்தை நிறுத்த முடியாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை.

 வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் வான்கோழி. நமக்குள் வளரும் மிருகங்களை ஒழித்து மனிதத்தன்மையை வளர்க்க வேண்டும். மண்ணிலே அமரராவோம்.

 பாரதியின் "நடிப்புச் சுதேசிகள்' என்ற பாடல் இக்கட்டுரையோடு ஒப்பு நோக்கத் தக்கது.

("எத்தனை கோடி இன்பம்' என்ற நூலில் எதிரொலி விசுவநாதன்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com