ஆன்டனோவ் எ.என். 225

1980-இல் சோவியத் யூனியனின் "ஆன்டனோவ் டிசைன் பீரோ'வால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட விமானம் இது. உக்ரைன் மொழியில் இதன் பொருள் "கனவு'.
ஆன்டனோவ் எ.என். 225

1980-இல் சோவியத் யூனியனின் "ஆன்டனோவ் டிசைன் பீரோ'வால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட விமானம் இது. உக்ரைன் மொழியில் இதன் பொருள் "கனவு'.

உண்மையில் சோவியத் யூனியனின் கனவுதான். ஆனால் சோவியத் யூனியன் பிரிந்ததும் உக்ரைனிடம் ஒப்படைக்கப்பட்டது.

உலகில் புழக்கத்தில் உள்ள மிக நீளமான, மிக அதிக எடை கொண்ட விமானம் இதுதான். இதில் அதிகபட்சமாக 640 டன் எடையைத் தூக்கிச் செல்ல முடியும்.

1988-இல் கட்டிமுடிக்கப்பட்டு அந்த ஆண்டே விண்ணில் பறந்தது.

முதன்முதலில் விண்வெளி சார்ந்த வாகனங்களை, கருவிகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது. அடுத்து கனமானப் பொருட்களை எடுத்துச் செல்ல உதவியது.

2001-இல் 253 டன் எடை கொண்ட 4 மெயின் டேங்குகளை இது தூக்கிச் சென்றது.

எரிவாயு (எஹள்) பவர் ப்ளேண்டுக்குத் தேவைப்பட்ட ஜெனரேட்டரை (189டன்) தூக்கிச் சென்றது.

42 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு குளிரூட்டும் காற்றாடிக்கான இறக்கைகளை எடுத்துச் சென்றது.

இதில் கூடவே பயணிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை 6.

இதன் நீளம் -84 மீட்டர்

இரு இறக்கைகளின்

(விரி நீளம்) - 88.4.மீட்டர்

உயரம் - 18.1 மீட்டர்

காலி எடை - 285 டன்

ஒரு தடவை முழுமையாகப் பெட்ரோல் நிரப்பினால் 15,400 கி.மீ. இது பறக்கும்.

இதன் வேகம் மணிக்கு 763.2. கி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com