அழுது பார்த்ததில்லை

இந்திய - பாகிஸ்தான் யுத்தம் 1965- ஆம் ஆண்டில் முடிந்ததும் லூதியானா ஆஸ்பத்திரி ஒன்றில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த மேஜர் பூபிந்தர் சிங்கை பார்ப்பதற்காக பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி வந்து வார்டுக்குள் நுழைந்தார்.

அப்போது மேஜர் சிங் விம்மி விம்மி அழ ஆரம்பித்தார். ""சாகசத்திற்குப் பேர்போன பஞ்சாபியான நீ இப்படி அழலாமா''? என்று கேட்டார் சாஸ்திரி.

"" நான் மடியும் தறுவாயில் இருப்பதற்காக அழவில்லை. என் உடல் நிலை குறித்து விசாரிக்க பாரதப் பிரதமரே வந்திருக்கும்போது எழுந்து நின்று சல்யூட் அடித்து மரியாதை செய்ய முடியாத நிலையில் இருப்பதை எண்ணி அழுகிறேன்'' என்றார் அந்த வீரர்.

இதைக் கேட்ட சாஸ்திரியின் கண்களும் கலங்கின. "" வேறு எந்தச் சமயத்திலும் என் தந்தை அழுது பார்த்ததில்லை'' என்றார் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் சுனில் சாஸ்திரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com