எதிர் நீச்சல்தான் வாழ்க்கை

இந்தியா மிகவும் அதிசயமான, அற்புதமான தேசம்'- என்கிறார் ஸாம் காதர்ன் (Sam cawthorn).
எதிர் நீச்சல்தான் வாழ்க்கை

இந்தியா மிகவும் அதிசயமான, அற்புதமான தேசம்'- என்கிறார் ஸாம் காதர்ன் (Sam cawthorn).

ஸாம் ஆஸ்திரேலிய நாட்டு இளைஞர் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தாஸ்மேனியாவில் ஒரு ஹோட்டலில் நண்பருடன் உணவருந்திவிட்டு, கைகுலுக்கி அவரிடமிருந்து விடைபெற்றார். வீட்டை நோக்கி காரை ஓட்டி வந்த போது அந்தப் பயங்கர விபத்து ஏற்பட்டது. கண் விழித்துப் பார்த்தபோது,பல நாட்கள் ஆகிவிட்டன. வலதுகால், வலதுகை, விலா எலும்புகள் என்று முக்கியமான பல உறுப்புகள் நொறுங்கிப் போய்விட்டன - எனது கையும், காலும் துண்டாகி தூரத்தில் விழுந்து இருந்தன. நான் அவ்வளவுதான் என்று எல்லாரும் நினைத்தார்கள். அவர்களது எண்ணத்தைப் பொய்யாக்கிவிட்டு இப்போது எங்கு வேண்டுமானாலும் போய் வருகிறேன்.

செயற்கை, கை, கால் போன்றவற்றைப் பொருத்திக் கொண்டு ஸாம் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். இளைஞர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் அளித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

கெவின்ருட் என்ற தாஸ்மானியப் பிரதமரை ஒரு முறை சந்தித்தார், ஸாம் அவரோடு பல முக்கிய பிரமுகர்களும் இருந்தனர். பிரதமருடன் ஸாம் கைகுலுக்கினார். ஸாமின் கை, பிரதமரின் கையோடு வந்துவிட்டது. பிரதமர் தடுமாறிப் போனார். அப்புறம்தான் அது செயற்கையான கை என்று அவருக்குத் தெரிய வந்தது.

இந்தியாவில் பதினேழு ஊர்களுக்கு வந்து இளைஞர்களைச் சந்தித்துள்ள ஸாம் காதர்ன், "" இந்தியக் கல்விமுறை இளைஞர்களைக் கனவு காணச் செய்யவில்லை. அவர்களை நேரடியாக வெற்றிக்கனியைத் தேடிச் செல்ல வைக்கிறது'' - என்கிறார்.

"" இன்று, இந்தியா மிகவும் அதிசயமான, அற்புதமான நாடாகக் காணப்படுகிறது'' - என்று வியப்பாகக் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com