இவங்க சொன்னதெல்லாம் நல்ல வேளையா பலிக்கலீங்க!

ரயில் கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக பல "நெகடிவ்' கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஓடும். நிற்காது! நின்றால் கிளம்பாது, கிளம்பவே கிளம்பாது.
இவங்க சொன்னதெல்லாம் நல்ல வேளையா பலிக்கலீங்க!

ரயில் கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக பல "நெகடிவ்' கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஓடும். நிற்காது! நின்றால் கிளம்பாது, கிளம்பவே கிளம்பாது. ஆனால் இந்த நெகடிவ் கருத்துக்களை முறியடித்து இன்று ரயில்கள் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் கூட செல்கின்றன.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட போதும், போன் கண்டுபிடிக்கப்பட்ட போதும் இப்படி "நெகடிவ் கமண்டுகளே' வந்தன. ஆனால் அவை காலத்தால் முறியடிக்கப்பட்டன.

இதே போன்று தற்போது ஓஹோ என பேசப்படும் பலவற்றை பிரபலங்கள் எப்படி கருத்து தெரிவித்திருப்பார்கள் பார்ப்போமா?

ஸ்டீவ் பால்மர்: மைக்ரோ சாஃப்ட் நிர்வாகி - 2007 ஐ - போனுக்கு;

மார்க்கெட்டில் கணிசமான இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை... வாய்ப்பே இல்லை...

ராபர்ட் மெட்கால்ப் : 3 காம் மற்றும் ஈ - தர்நட் கண்டுபிடிப்பாளர் நிறுவனர் -1995.

""இன்டர்நெட், சூப்பர் நோவா மாதிரி வெடித்துச் சிதறி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்''.

கென் ஓல்சன்: டிஜிடல் எக்யூப்மெண்ட் கார்பரேஷன் நிறுவனர் - 1977.

""ஒவ்வொரு வீட்டிலும் கம்ப்யூட்டர் இடம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை''.

டாரில் ஷன்னுக்: ட்வென்டியத் சென்சுரி பாக்ஃஸ் நிறுவன எக்சிக்யூடிவ் ( 1946)

""டெலிவிஷனுக்கு முதல் 6 மாதத்தில் கிடைத்த மார்க்கெட் பின்னாளில் ஏற்பட வாய்ப்பே

இல்லை. தினமும் இரவு அந்த ஃபளைவுட்

பாக்ûஸ மக்கள் பார்த்து பார்த்து விரைவில் ஓரங்கட்டிவிடுவர்''.

லார்ட் கெல்வின்: ராயல் சொசைட்டி தலைவர் - 1883

""எக்ஸ்ரே - தந்திரமான ஏமாற்று வேலை என்பதை அதுவே காட்டிக் கொடுத்துவிடும்''.

வில்லியம் ஆர்டன்: வெஸ்டர்ன் யூனியன் "டு' அலெக்சாண்டர் கிரகாம்பெல் - 1878

""டெலிபோனில் பல குறைகள் உள்ளன. ஆக எதிர்காலத்தில், தொலைத் தொடர்பு சாதனங்களில் முக்கியமானதாக அதனைக் கருத வாய்ப்பு மிக குறைவு''.

- கருத்து சொன்னவர்கள் அனைவரும் தொழிலில் விற்பன்னர்கள். அவர்களின் கருத்தும்

பொய்யாக வாய்ப்பு உண்டு என்பதற்கு இவை உதாரணங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com