அண்ணன் அறிவுரை!

பெரும் செல்வந்தரான ஜம்னாலால் பஜாஜின் மகன், படிப்புக்காக மேல் நாட்டுக்குச் சென்றபோது, காந்திஜி அவருக்குக் கடிதம் எழுதினார்.

பெரும் செல்வந்தரான ஜம்னாலால் பஜாஜின் மகன், படிப்புக்காக மேல் நாட்டுக்குச் சென்றபோது, காந்திஜி அவருக்குக் கடிதம் எழுதினார். அதில் அவர் அறிவுரையாகக் குறிப்பிட்டவை...

1. மிதமாகப் பேசு.

2. யார் எது சொன்னாலும் கேட்டுக்கொள். ஆனால், உனக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்.

3. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்.

4. பணக்காரன் என்று பெருமை கொள்ளாதே.

5. செய்யும் செலவுக்குக் கணக்கு எழுது.

6. நாள்தோறும் தவறாமல் நாட்குறிப்பு எழுது. "காந்திஜி சில நினைவுகள்' நூலிலிருந்து. த.சீ.பாலு.

  • பைபிளில் "மேலும்' என்பதற்காகக் குறிக்கப்படும் அய்க் என்ற வார்த்தை மொத்தம் 46277 இடங்களில் வருகின்றதாம்.

  • ஒரே கிறிஸ்துவ ஆலயத்தின் கத்தோலிக்கர்களும், சிறிது நேரத்திற்குப் பின்னர் பிராட்டஸ்ட்டண்டுகளும் இறைவனை வழிபடுவது சுவிட்சர்லாந்து நாட்டில்தான் உண்டு. வேறு எந்த நாட்டிலும் இப்பழக்கத்தைக் காணமுடியாது.

  • வெறும் பச்சை நிறத்துணியை தேசீயக் கொடியாக கொண்ட நாடு லிபியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com