பாரதியாரின் கோபம்!

ஒருசமயம் பாரதியைச் சந்திக்க வேண்டுமென்று கடிதம் மூலம் ஒருவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
பாரதியாரின் கோபம்!

ஒருசமயம் பாரதியைச் சந்திக்க வேண்டுமென்று கடிதம் மூலம் ஒருவர் விருப்பம் தெரிவித்திருந்தார். உண்மையில் இலக்கிய ரசிகர் அல்லர். ஆங்கிலேய அரசின் ரகசிய போலீஸ் பிரிவைச் சேர்ந்தவர். அவர் துறவிபோல் வேடமிட்டு, ஒப்பனை செய்துகொண்டு பாரதியாரைச் சந்தித்தார்.

ஆனால், பாரதியைப் பார்த்த உடனே பாரதிக்குத் துறவி வணக்கம் செலுத்தினார். அதைக் கண்ட பாரதி "முதலில் சந்நியாசிக்குத்தான் மற்றவர்கள் வணக்கம் செலுத்துவர்' என்று கூறினார். இதைக் கேட்டதும், உளவு பார்க்க வந்த போலீஸ்காரர் தன் தவறை உணர்ந்து, தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

பாரதி அவரிடம், ""வேறு எதுவும் செய்ய முடியாவிட்டால் சாப்பிடுவதற்குப் பிச்சை எடு. பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ரகசிய போலீஸ் வேலை பார்ப்பதைவிட அது உயர்ந்தது'' என்று கூறி கடிந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com