விண்வெளியில் உயரம் கூடியது எப்படி?

சமீபத்தில் 340 நாட்கள் வின்னில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பினார் ஸ்காட் கெல்லி.
விண்வெளியில் உயரம் கூடியது எப்படி?

சமீபத்தில் 340 நாட்கள் வின்னில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பினார் ஸ்காட் கெல்லி.

 இப்போது இவரது உயரம் முன்பைவிட 2 அங்குலம்  கூடியுள்ளது.

 இளமையும் 1/100 விநாடிகள் கூடியுள்ளது. அதாவது வயதில் முதுமை குறைந்துள்ளது.

 எதனால் இவை நிகழ்ந்தன?

 உங்களுக்குத் தெரியுமா?

விண்வெளியில் பயணித்து ஆய்வுக் கூடங்களில் வசிப்பவர்களின் உயரம் 3 சதவிகிதம் கூடுகிறதாம்.

எப்படி?

 பூமியில் ஈர்ப்பு விசையால் ஏற்படும் அழுத்தம், விண்வெளியில் குறைவு. இதனால் முதுகெலும்பு நீண்டு உயரமும் 2 அங்குலம் கூடிவிட்டது.

 இது நிரந்தரமா?

 கிடையாது. இங்கு இறங்கிய சில மாதங்களில் அவர் உயரம் பழைய நிலைக்கு வந்துவிடும்.

 அடுத்தது.. இளமை 1/100 விநாடிகள் கூடியது

பற்றியாகும்.

 பூமி சுற்றும் வேகத்தை விட, விண்வெளி ஆய்வு நிலையம் சுற்றும் வேகம் அதிகம்.

உதாரணமாக, விண்வெளி நிலையம் மணிக்கு 27600 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இது பூமியின் வேகத்தை விட கூடுதல்.

 இந்த நிலையில் இயக்க விதியின்படி, சென்று கொண்டிருக்கும் இரு பொருட்களில், ஒன்றின் வேகம் மற்றதை விடக் குறைவாக இருக்குமானால், குறைவானதற்கு நேரம் வேகமாக செல்லும்.... இதனால் பூமியைவிட வேகமாக சென்ற கெல்லி, மேலும் 1/100 இளமையானார்.

 கெல்லி மொத்தம் 340 நாட்கள் விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்தார் அல்லவா? அப்போது 232 மில்லியன் கி.மீ. விண்ணில் பயனித்ததுடன், மொத்தம் 5440 தடவை உலகை சுற்றி வந்திருப்பார். அதே சமயம் 10880 சூரிய உதயங்களையும் சூரியமறைவுகளையும் தரிசித்திருப்பார்.

ஆக உயரம் கூடுவதும், இளமை கூடுவதும் நிகழும்;  விண்வெளி உண்மையில்  ஒரு சிறந்த பிளாஸ்டிக் சர்ஜன்.

 இதெல்லாம் உங்களுக்கும் நிகழ்ந்து அனுபவிக்க வேண்டுமானால், பூமியின் சுகங்களை ஒரு வருடத்திற்கு இழக்கத் தயாராய் இருக்க வேண்டும். ரெடியா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com