சிரி... சிரி... 

"இந்த ஜென்மத்தில் இவர் கார் டிரைவிங் பழக மாட்டார் போலிருக்கு''"எப்படி சொல்றீங்க?''
சிரி... சிரி... 

• "இந்த ஜென்மத்தில் இவர் கார் டிரைவிங் பழக மாட்டார் போலிருக்கு''
"எப்படி சொல்றீங்க?''
"க போர்டை காரில் வெல்டு பண்ணனும்னு சொல்றாரு''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

• "என்னப்பா சர்வர்... மினி போண்டா கொண்டு வரச் சொன்னால்,  இரண்டு  சீடையைத் தட்டில் கொண்டு வந்திருக்கே...!''
"போண்டாதான் சார் அது... சைஸ் கொஞ்சம் சின்னதா இருக்கும்...!''
என்.எஸ்.வி. குருமூர்த்தி,  கும்பகோணம்.

• "டி.வி.  சத்தத்துல குக்கர் விசில் சத்தம் கேட்க
முடியவில்லையே...''
"அதனால குக்கரின்மீது "டபுள்' விசில் செட் பண்ணிட்டேன்.''
டிஎன்.ரங்கநாதன், திருச்சி.

• "உன் மனைவி உன் தலை மேல ஏன் சுத்தியலைப் போட்டாங்க?''
"சுத்திப் போட்டா, திருஷ்டி கழியும்னு யாரோ சொன்னாங்களாம்''
டிஎன்.ஆர்., திருச்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com