ஒரு சந்தேகம்!

என்னுடைய  விழா ஒன்றில்  ஒரு பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கினேன்.  அதைப்பார்த்தச்  சிலர்  என்னைக் கோபித்தார்கள். நான் சொன்னேன்...
ஒரு சந்தேகம்!

என்னுடைய  விழா ஒன்றில்  ஒரு பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கினேன்.  அதைப்பார்த்தச்  சிலர்  என்னைக் கோபித்தார்கள். 
நான் சொன்னேன்...

""அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக்கிரகம்  செய்யப் போன கால்கள். சிறைச்சாலையில்  பல்லாண்டு  உலாவிய  கால்கள்.  என்னுடைய  கால்களுக்கு அந்தப் பாக்கியம்  இல்லாததால், கைகளாவது  அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே''

சில  சமயங்களில், சில சபைகளில் என்னை உட்கார  வைத்துக் கொண்டே என்னைப் புகழ்வார்கள். எனக்குச் சர்வாங்கமும் ஒடுங்கிவிடும்.

நாம் என்ன எழுதிவிட்டோம் ?  என்ன  செய்து விட்டோம்  என்ற எண்ணமே தோன்றும். 

இப்படிப்  புகழ்கிறார்களே  என்ற பயம் தோன்றும்.

ஆண்டவன்  என் தலையில் ஆணவத்தை உட்கார வைத்து என்னை அவமானப்படுத்தவில்லை.

அடக்கத்தில்  இருக்கும் சுகம்,  ஆணவத்தில் இல்லை.

இப்படி  பெருமைப்பட்டவர்:  கவிஞர் கண்ணதாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com