தமிழ் வாழ்க!

"இன்று பாரதியார் சொன்ன வார்த்தைகளுடன் என்னுடைய உரையையும் சட்டசபையின் அலுவலையும் முடித்துக் கொள்கின்றேன்.

"இன்று பாரதியார் சொன்ன வார்த்தைகளுடன் என்னுடைய உரையையும் சட்டசபையின் அலுவலையும் முடித்துக் கொள்கின்றேன். பாரதியார் "வாழிய செந்தமிழ்' என்றார். "வாழ்க நற்றமிழர்' என்றார். அந்த வாழ்வு ஏதோ பிரிந்த வாழ்வு என்று அவர் கருதவில்லை.
 "வாழிய பாரத மணித்திரு நாடு' என்று சொன்னார். அப்பேர்ப்பட்ட வாழ்வு எங்கெங்கும் ஓங்கட்டும். "வாழ்க தமிழ்', "வாழ்க தமிழ்' , "வாழ்க தமிழ்' (பலத்த கைத்தட்டல்)'' என்றார் அமைச்சர் சி.சுப்பிரமணியம்.
 கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியும் அவருடன் சேர்ந்து எல்லா அங்கத்தினர்களும் "வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்!'' என்று முழங்க பலத்த ஆரவாரத்துக்கிடையே தமிழ் ஆட்சி மொழி மசோதா ஏகமனதாக நிறைவேறியது.
 ஆதாரம்: தமிழ் ஆட்சி மொழி ஒரு வரலாற்று நோக்கு ( 1921 - 1956) நூல்.
 தகவல்: தங்க.சங்கரபாண்டியன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com