பேல்பூரி

இந்த நூற்றாண்டில் மனிதர்களை மிகவும் பாதிப்படையச் செய்திருக்கும் நோய் சர்க்கரை நோய். ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவு சராசரியாக இருப்பதைவிடக் கூடினாலும், குறைந்தாலும்
பேல்பூரி

கண்டது
* (ராஜபாளையம் துரைசாமிபுரம் அருகே உள்ள ஒரு கோயிலின் பெயர்)
அழிசோடை புளுகாண்டி கோயில்
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை.

* (மதுரை கோரிப்பாளையத்தில் ஒரு ஷேர் ஆட்டோவில்)
கேட்டால் வழி...
இல்லையேல் வலி.
எஸ்.டேவிட் மாசிலாமணி, புதுத்தாமரைப்பட்டி.

* (வேலூர் - சூர்யகுளம் அருகில் உள்ள ஒரு வீட்டுப் பிராணிகளுக்கான கடையின் பெயர்)
குழந்தைகளின் குழந்தை
வெ.ராம்குமார், வேலூர். 

கேட்டது
* (திருச்செந்தூர் கடற்கரையில் இளம் ஆணும் பெண்ணும்)
"இந்தப் பிறவியில் மட்டுமல்ல... அடுத்து வர்ற எல்லாப் பிறவியிலும் நீதான் எனக்கு மனைவியாகணும்னு ஆசைப்படுறேன்''
"மண்ணாங்கட்டி... முதல்ல உங்க அப்பா, அம்மாவைச் சம்மதிக்க வைச்சு இந்தப் பிறவியில் எனக்குத் தாலி கட்டப் பாருங்க...''
ஆதினமிளகி, வீரசிகாமணி.

* (திருச்சி திருவெறும்பூர் நகரப் பேருந்துநிலையம் அருகே இளைஞர்களிருவர்)
"நேத்து வெயில்ல அலைஞ்சதாலே சளி பிடிச்சுக்கிருச்சு''
"மழையில் நனைஞ்சாத்தானே சளி பிடிக்கும்? மாத்திச் சொல்றீயே''
"கணக்கில் பிளஸ் X பிளஸ் = பிளஸ்... மைனஸ் X மைனஸ் = பிளஸ்... அதுபோலத்தான் மழையில் நனைஞ்சாலும் வெயில்ல காய்ஞ்சாலும் சளி பிடிக்கும். கணக்குப் படிச்சிருந்தாத்தான் இதெல்லாம் புரியும். உனக்கும் கணக்குக்கும் ரொம்ப தூரம். உனக்கெல்லாம் புரியாது. "
ஆர்.தனம், திருச்சி-2.

எஸ்எம்எஸ்
மனிதனின் தலையைச் சரி செய்வதற்கு 
சீப்பு மட்டும் போதாது.
சிந்தனையும் வேண்டும்.
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

யோசிக்கிறாங்கப்பா!
நீ ஊமையாய் இருக்கும் வரை...
இந்த உலகம் 
செவிடாகத்தான் இருக்கும்.
வரதராஜன், திருவாரூர்.

அப்படீங்களா!
இந்த நூற்றாண்டில் மனிதர்களை மிகவும் பாதிப்படையச் செய்திருக்கும் நோய் சர்க்கரை நோய். ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவு சராசரியாக இருப்பதைவிடக் கூடினாலும், குறைந்தாலும் அதை சர்க்கரை நோய் என்கிறோம். கணையத்தில் சுரக்கும் இன்சுலின் உடலுக்குத் தேவையான அளவு சுரந்தால், ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவு சரியாக இருக்கும். கணையம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், சர்க்கரை நோய் வந்துவிடும். 
சர்க்கரை நோய் வந்தவர்கள், அடிக்கடி ரத்த பரிசோதனை செய்து கொள்வதும், இன்சுலின் மாத்திரைகளை உட்கொள்வதும், இன்சுலினை ஊசியின் மூலம் ஏற்றிக் கொள்வதும் நாம் எல்லாரும் அறிந்தவையே.
இந்த எல்லா வேலைகளையும் செய்ய வந்துவிட்டது இந்தக் கருவி. இதை உடலில் பொருத்திக் கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனுக்குடன் கணக்கிட்டு, தேவையான அளவு இன்சுலினை உடலில் தானாகவே ஏற்றிவிடும். இனிமேல் சர்க்கரை நோய் வந்தவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வேறு வேலைகளைப் பார்க்கலாம்.
CellNovo & Diabeloop - என்ற ஐரோப்பிய நிறுவனமும் பிரான்சின் ஆராய்ச்சியாளர் கூட்டமைப்பும் இந்தக் கருவியை உருவாக்கிருக்கிறார்கள்.
என்.ஜே., சென்னை-116.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com