வித்தியாசமான தம்பதி...!

வித்தியாசமான தம்பதி...!

சில தம்பதிகளைப் பார்க்கும் போது, "என்ன பொருத்தம் ... இவர்களுக்குள் இந்தப் பொருத்தம்.' என்று பாராட்டத் தோன்றும்.

சில தம்பதிகளைப் பார்க்கும் போது, "என்ன பொருத்தம் ... இவர்களுக்குள் இந்தப் பொருத்தம்.' என்று பாராட்டத் தோன்றும். அந்த பட்டியலில் வருபவர்கள்தான் மாமோதா தேவி யும்னம் - போருன் யும்னம் தம்பதியினர். மணிப்பூர் மண்ணைச் சேர்ந்தவர்கள். இருவரும் பாடி பில்டிங் துறையில் முத்திரை பதித்திருப்பவர்கள்.
 மாமோதா தேவி மூன்று குழந்தைகளுக்குத் தாய். பாடி பில்டிங்கில் அநேக விருதுகளைப் பெற்றிருக்கும் மாமோதா தேவிதான் முதன் முதலில் சர்வதேச பாடி பில்டிங் போட்டியில் விருது பெற்ற முதல் இந்திய பெண்.
 கணவர் போருன் தொழில்ரீதியிலான பாடி பில்டர். மிஸ்டர் இந்தியாவாகவும், மிஸ்டர் ஆசியாவாகவும் பட்டங்களை வென்றவர். இப்படி சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கும் முதல் தம்பதியினர் மாமோதா தேவி யும்னம் - போருன் யும்னமும்தான்.
 மாமோதா தேவி - போருன் தற்சமயம் டில்லியில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றினை நடத்தி வருகிறார்கள். உடற்பயிற்சி தரும் பயிற்சியாளர்களும் இந்த தம்பதிதான்..!
 "நான் 2011-இல் பயிற்சியைத் தொடங்கினேன். உடலை ஃபிட்டாக வைத்தல் மிக முக்கியமான விஷயம். உடலை ஃபிட்டாக வைப்பதினால் பல நோய்களை அண்ட விடாமல் துரத்தி விடலாம். ஃபிட்னஸ்ஸில் எங்கள் இருவருக்கும் தணியாத ஈடுபாடு. பேசுவதும், தர்க்கம் செய்வதும் கூட ஃபிட்னஸ் குறித்துதான். உடலை கட்டமைப்பாக வைத்துக் கொள்வது மிகச் சிரமமான வேலை. கடுமையான உணவு கட்டுப்பாடு தேவை. உடல் பயிற்சி செய்ததினால், எனது உடல்வாகு உறுதிப்பட்டு தோற்றத்தில் ஆண் மாதிரி ஆகிவிட்டேன். இந்த மாற்றத்தை நான் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக இரும்பு மனுஷியானேன்.
 பாடி பில்டிங் அரங்கம் ஆண்களுக்கானது. இந்தத் துறையில் பங்கு பெற்றிருக்கும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் ஒரு சதவீதம் கூட இருக்காது. இருந்தாலும், என்னால் பாடி பில்டிங் உலகில் ஆண்களுக்கு நிகராக சாதனை செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளேன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஆணும் பெண்ணும் சமம் என்று எனது பாடி பில்டிங் பயணத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். தாஷ்கண்ட் நகரில் நடந்த சர்வதேசப் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 2015 -இல் ஆசிய பாடி பில்டிங் போட்டியில் எனக்கு முதலிடம் கிடைக்க, போருன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். கணவன் மனைவி இருவருக்கும் ஆண் - பெண் பிரிவில் ஒரு போட்டியில் பதக்கங்கள் கிடைப்பதும் முதல் முறையாகும். அந்தப் பெருமை எங்களுக்குக் கிடைத்தது. உலகப் போட்டியில் பாடி பில்டிங் பிரிவில் எனக்கு வெண்கலம் கிடைத்தாலும், அந்தப் பெருமையைப் பெறும் முதல் இந்திய பெண்மணி நான்தான். இந்தப் பெருமை 2012 , 2013- இல் என்னை வந்தடைந்தது'' என்கிறார் மாமோதா.
 - ஏ. எ. வல்லபி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com